முதலாளி உங்களுக்கு என்னாச்சு.. ஆஸ்பத்திரி வாசலில் கவலையுடன் காத்து கிடந்த 4 நாய்கள்
எஜமானனுக்காக ஆஸ்பத்திரி வாயிலில் நாய்கள் காத்து கிடந்தன.
பிரசிலியா: தெருநாய்கள்தான்... ஆனால் எல்லோரையுமே கண்கலங்க வைத்துவிட்டன.
பிரேசில் நாட்டில் நடந்த சம்பவம் இது. சீசர் என்ற நபர் தெருவில் போகும்போது அங்கிருக்கும் 4 நாய்களுக்கு சாப்பாடு தருவாராம். எப்பவும் இப்படி சாப்பாடு தருவது இல்லையாம்.
என்றைக்காவது அந்த வழியாக சென்றால், அதுவும் அந்த நேரத்தில் கையில் ஏதாவது சாப்பாடு இருந்தால் அந்த தெரு நாய்களுக்கு போடுவாராம். உடனே அந்த 4 நாய்களும் அதை சாப்பிட்டுவிட்டு வாலை ஆட்டுமாம்.

தாங்க முடியவில்லை
இந்த நிலையில் சீசருக்கு ஒரு நாள் உடம்பு சரி இல்லாமல் போய்விட்டது. அதனால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீசர் இப்படி ஆஸ்பத்திரியில் நோயுற்று படுத்து கிடப்பதை இந்த 4 நாய்களால் தாங்கி கொள்ளவே முடியவில்லை.

காத்து கிடந்தன
அதனால் ஆஸ்பத்திரி வாசற்படிக்கு வந்து 4 நாய்களும் நின்றுவிட்டன. சீசரை பார்ப்பதற்காக அவை காத்து கிடப்பதை மருத்துவமனை நிர்வாகம் ஆச்சரியத்துடன் பார்த்தது. இப்படியே ஒரு மணி நேரமாக நாய்களும் நின்று கொண்டே இருந்தன.
போட்டோ
இதை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள், சீசரை பார்க்க உள்ளே அனுமதித்து இருக்கிறார்கள். சீசரால் வளர்க்கப்படாத நாய்கள் இப்படி ஏக்கத்துடன் காத்து நிற்பதை ஆஸ்பத்திரி ஊழியர் ஒருவர், போட்டோ எடுத்து இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

கண்கலங்குகிறது
எந்தவித எதிர்பார்ப்பற்ற பாசமும்,புரிதலும், உள்ள தெருநாய்களின் ஏக்கமிகு முகத்தினை கண்டு எல்லோருமே கண்கலங்கி விடுகின்றனர். இந்த போட்டாதான் தற்போது வைரலாகி வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications