காலையிலேயே குலுங்கிய ரஷ்யா.. சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி அலர்ட் விடுக்கப்பட்டதால் மக்கள் பீதி
மாஸ்கோ: ரஷ்யாவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சிறிது நேரத்தில் இந்த எச்சரிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ரஷ்யாவின் கிழக்கு கம்சட்கா தீபகற்ப பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று காலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக நிலநடுக்கம் பதிவானது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின.

பெட்ரோபாவ்லோவ்ஸ்க் - கம்சாட்ஸ்கி நகரங்களுக்கு இடையே இந்த நிலநடுக்கம் நன்கு உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். காலையில் தூக்கத்தில் இருந்த மக்களும் நிலநடுக்கத்தின் அதிர்வுளை உணர்ந்து திடுக்கிட்டு எழுந்தனர். நிலநடுக்கம் குறித்த தகவல் கிடைத்ததும் மிட்பு குழுவினரும் தீ அணைப்பு வீரர்களும் நிகழ்விடத்திற்கு விரைந்துள்ளனர்.
அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் உடனடியாக சுனாமி எச்சரிக்கையை விடுத்தது. ஆனால், சுனாமி எச்சரிக்கை பிறகு நிறுத்தி வைக்கப்பட்டது. உள்ளூர் அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடவில்லை. ரிக்டர் அளவில் 7.0 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து பல பின் அதிர்வுகளும் ஏற்பட்டுள்ளன. ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா பசிபிக் பெருங்கடலின் ஓரத்தில் அமைந்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்படக் கூடிய ரிங்க் ஆப் ஃபயர் எனப்படும் பகுதியில் இந்த இடம் அமைந்து இருப்பதால் இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கைதான். ஆனாலும் ரிக்டர் அளவில் 7 என்ற அளவில் மிகக் கடுமையாக இந்த நிலநடுக்கம் எற்பட்டு உள்ளதால் மக்கள் அச்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ பொருட்சேதமோ எதுவும் ஏற்ட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை.
-
73 ஏவுகணை தாக்குதல்.. 656 ட்ரோன்.. சைரன் சத்தம்.. பெண்கள், குழந்தை கதறல்.. உக்ரைனை துவம்சம் செய்த ரஷ்யா! -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications