அனைவருக்கும் வருடத்திற்கு ரூ. 18.67 லட்சம் அடிப்படை சம்பளம் தரலாமா?.... சுவிஸில் வாக்கெடுப்பு
பெர்ன் வயது வந்த குடிமக்களுக்கு வருடத்திற்கு ரூ. 18,67,590 அடிப்படை ஊதியம் வழங்கலாமா என்பது குறித்து தேசிய அளவிலான வாக்கெடுப்பை சுவிட்சர்லாந்து நடத்துகிறது.
சுவிட்சர்லாந்தில் அனைவருக்கும் சமமான ஊதியம் கிடைக்க வகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதையடுத்து இதுதொடர்பாக தேசிய அளவிலான வாக்கெடுப்பை சுவிட்சர்லாந்து நாடு நடத்துகிறது.
அதில், வயது வந்த அனைவருக்கும் வருடத்திற்கு சமமான அளவில் ரூ. 18,67,590 அடிப்படை ஊதியமாக தரலாமா என்பது குறித்து கேள்வி கேட்கப்படும். இந்த வாக்கெடுப்பில் சுவிட்சர்லாந்து நாட்டு வாக்காளர்கள் அனைவரும் கலந்து கொண்டு வாக்களிக்கவு்ளனர். இதன் அடிப்படையில், இதை சட்டமாக்குவது தொடர்பாக சுவிட்சர்லாந்து அரசு முடிவெடுக்கும்.
பிற நாடுகளைப் போலவே சுவிட்சர்லாந்திலும் நிதி நெருக்கடி நிலவுகிறது. இதையடுத்தே அனைவருக்கும் ஒரே மாதியான ஊதியத்தை நிர்ணயம் செய்ய கோரிக்கை வலுத்துள்ளது. குறிப்பாக நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுக்கு மிக மிக அதிகமான அளவில் சம்பளமும், மற்றவர்களுக்கு குறைவாகவும் இருப்பதை தடுத்து அனைவருக்கும் சம ஊதியம் கிடைக்கச் செய்ய வேண்டும். அப்போதுதான் பொருளாதார ஏற்றத் தாழ்வு வெகுவாக குறையும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இதையடுத்தே தற்போது இந்த வாக்கெடுப்பை நடத்துகிறது சுவிட்சர்லாந்து அரசு. இந்த வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் கையெழுத்திட்ட மனுவை அரசிடம் அளித்துள்ளனர்.
அத்தோடு நில்லாமல் ஒரு லாரி நிறைய 80 லட்சம், ஐந்து பைசா (அந்த ஊரில் ஐந்து சென்ட்) நாணயங்களைக் கொண்டு வந்து பெர்ன் நகரில் உள்ள நாடாளுமன்றக் கட்டடம் முன்பும் கொட்டி தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.
சுவிட்சர்லாந்து நாட்டுச் சட்டப்படி, மக்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி வாக்கெடுப்பு நடத்த அரசை நிர்ப்பந்திக்க முடியும். இதனால் வருடத்திற்கு பல வாக்கெடுப்புகள் அங்கு நடப்பது சகஜம். வாக்கெடுப்பில் கிடைக்கும் முடிவை அரசு அமல்படுத்தியாக வேண்டும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications