க்ரீன் சிக்னல்.. கோவேக்சின் தடுப்பூசிக்கு ஓகே சொன்ன பிரபல நாடு..தொற்றை தடுக்கும் தீவிரத்தில் அரசுகள்
கோவேக்சினுக்கு ஸ்விட்சர்லாந்து அனுமதி தந்துள்ளது
பெர்ன்: கோவேக்சின் தடுப்பூசிக்கு ஸ்விட்சர்லாந்து அரசும் ஒப்புதல் வழங்கி உள்ளதாம்.. அதேபோல மேலும் சில நாடுகளும் கோவேக்சினை பயன்படுத்த முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் என்ற தடுப்பூசியை உருவாக்கி இருக்கிறது.. இந்த தடுப்பூசியை பெரும்பாலானோருக்கு இந்தியா செலுத்தி வருகிறது..
ஆனால், கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளிக்காமல் இருந்து வந்தது.. எனவே, அதனை அவசர காலத்தில் பயன்படுத்தி கொள்வதற்கான அனுமதியை உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் வழங்கியது...

வைரஸ்
இது சம்பந்தமாக, முன்னதாக, நடத்தப்பட்ட அந்த கிளினிகல் சோதனை முடிவுகளில் கோவேக்சின் தடுப்பூசியானது, அறிகுறிகளுடன் கூடிய கொதரானாவுக்கு எதிராக 77.8 சதவீதம் பாதுகாப்பையும், புதிய டெல்டா மரபணு மாற்று வைரசுக்கு எதிராக 65.2 சதவிகித பாதுகாப்பையும் அளிக்கக்கூடியதாக இருப்பதாக உறுதியானது. இந்த நிறுவனமானது, அமெரிக்காவை சேர்ந்த ஒகுஜென் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

அமெரிக்கா
எனவே, 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசியை அவசரகாலத்தில் பயன்படுத்தி கொள்வதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பிடம் ஒகு ஜென் நிறுவனம் வாயிலாக அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையிலும் கூறப்பட்டிருந்தது. அதேசமயம், பல்வேறு நாடுகள் கோவேக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதியை வழங்கி வருகின்றன.. 2 நாளைக்கு முன்பு மலேசியாவில்கூட கோவேக்சின் செலுத்தி கொள்ள அனுமதி தரப்பட்டது.

பிரிட்டன்
இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசிக்கு சுவிட்சர்லாந்து நாட்டு அரசும் அங்கீகாரம் அளித்துள்ளது... இதே போல், ஐரோப்பிய நாடான பிரிட்டனும், கோவாக்சின் தடுப்பூசிக்கு விரைவில் அங்கீகாரம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது... அமெரிக்கா உள்ளிட்ட 16 நாடுகள், கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு ஏற்கனவே அங்கீகாரம் அளித்திருக்கும் நிலையில், மேலும் சில நாடுகள் இதில் இணைந்து வருகின்றன.

உயிரிழப்பு
உலகம் முழுவதும் இதுவரை 251,027,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 5,070,865 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்... கொரோனாவைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 227,299,787 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிய நிலையில் 18,656,738 பேர் இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 18,580,373 பேர் லேசான தொற்று அறிகுறிகளுடனும், 76,365 பேர் கவலைக்கிடமான நிலையிலும் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications