"கடவுளே! ஒரு குழந்தையாவது பிழைக்கட்டும் ப்ளீஸ்!" 6 குழந்தைகளை பூகம்பத்தில் இழந்த நபர் கதறல்.. சோகம்

நிலநடுக்கத்தால் 6 குழந்தைகளை இழந்த துருக்கி நபர் அழுத காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது.

Subscribe to Oneindia Tamil

சிரியா: துருக்கி நிலநடுக்கத்தால் அங்கு மட்டுமின்றி சிரியாவிலும் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே அங்கு ஒருவர், தனது 6 குழந்தைகளை இழந்து துடிதுடித்துக் கதறி அழுத காட்சி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

கடந்த திங்கள்கிழமை துருக்கியில் மிக மோசமான ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலையில் மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது ரிக்டர் அளவுகோலில் 7.8இல் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து அன்றைய தினமும் அதற்கு மறுநாளும் அடுத்தடுத்து தொடர்ச்சியாக நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் அங்குள்ள பல கட்டிடங்கள் அப்படியே சரிந்தன. துருக்கியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.

 நிலநடுக்கம்

நிலநடுக்கம்

இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மிக மோசமான ஒரு பேரழிவாக இது பார்க்கப்படுகிறது. துருக்கி மட்டுமின்றி சிரியா நாட்டிலும் இந்த நிலநடுக்கம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அங்கு மீட்புப் பணிகள் இன்னும் தொடர்ந்து நடந்து வருகிறது. இப்போது வரை இந்த நிலநடுக்கத்தில் துருக்கி, சிரியாவில் 23,766 பேர் உயிரிழந்துள்ளனர்.. துருக்கியில் 20,213 பேரும் சிரியாவில் 3553 பேரும் நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

 சிரியா

சிரியா

அங்கு அடுத்தடுத்து முதல் நிலநடுக்கத்தில் தப்பிய கட்டிடங்கள் கூட அடுத்தடுத்த நிலநடுக்கங்களில் தரைமட்டமானது. இக்கட்டான நிலையில் இருக்கும் துருக்கி நாட்டிற்கு உதவுவதாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் அறிவித்துள்ளன. இந்த நிலநடுக்கத்தால் பலர் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தனர். அப்படியொரு மோசமான சம்பவம் தான் சிரியாவில் நடந்தது... சிரியாவில் உள்ள ஜான்டாரிஸ் என்ற நகரில் இருந்து வசித்து வருவர் நாசர் அல்-வக்கா. இவரது வீடும் நிலநடுக்கத்தால் நாசமானது. நாசர் அல்-வக்காவை முதலில் இடிபாடுகளில் இருந்து மீட்டுவிட்டனர்.

 கதறி அழுத நபர்

கதறி அழுத நபர்

நாசர் அல்-வக்காவின் இரண்டு குழந்தைகளை மீட்புப் படையினர் நள்ளிரவில் வீட்டின் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்டனர். அப்போது அவரது குழந்தைகளுக்கு அதிக காயங்கள் இருந்தன. அவர்கள் தூசியால் மூடப்பட்டு இருந்தனர்.. அவரது மற்றொரு குழந்தையும் உயிர் பிழைத்தது. ஆனால் வக்கா அங்கு இடிபாடுகளிலேயே அமர்ந்து, தனது மனைவி மற்றும் மற்ற இறந்த குழந்தைகளுக்காகக் கண்ணீர்விட்டுக் கதறினார். இந்த நிலநடுக்கத்தால் அவர் எத்தனை குழந்தைகளை இழந்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

 கடவுளே.. கடவுளே..

கடவுளே.. கடவுளே..

இருப்பினும், அவர் கொடுத்த பட்டியலில் மொத்தம் 3 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள் என்று 6 குழந்தைகளை அவர் இழந்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், மொத்தம் அவருக்கு எத்தனை குழந்தைகள் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், முதலில் அவரது ஆறு குழந்தைகளின் சடலங்களும் வரியாக மீட்கப்பட்டது. அப்போது அவர் கண்ணீர் விட்டுக் கதறிய காட்சி நெஞ்சை உலுக்குவதாக இருந்தது. "கடவுளே.. கடவுளே.. ஒரே ஒருவராச்சும் உயிர் பிழைக்கட்டும் ப்ளீஸ்.. நான் எப்போதும் உங்களுக்கு நன்றியுடன் இருப்பேன்" என்று சொல்லி அவர் கதறி அழுத காட்சி அங்குச் சோகத்தை ஏற்படுத்தியது.

 எப்படி இருந்தது

எப்படி இருந்தது

அவர் நிலநடுக்கம் ஏற்பட்ட தருணத்தையும் நினைவு கூர்ந்தார். அவர் கூறுகையில், "சிரியாவின் உள்நாட்டுப் போரின் போதும் நாங்கள் தப்பிப் பிழைத்தோம். அப்போது விமானத் தாக்குதல்கள், ராக்கெட்டுகள் மற்றும் குண்டுகள் என்று மோசமாக இருந்தது. ஆனால், நிலநடுக்கம் அதைக் காட்டிலும் வித்தியாசமாக இருந்தது. நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் நான் உடனடியாக வெளியே ஓடி வந்துவிட்டேன்.. ஒரு குழந்தையாவது உயிர் பிழைக்க வேண்டும்.. அதுவே எனக்கு போதும் என்றே நான் கதறி அழுதேன்" என்று அவர் தெரிவித்தார்.

 6 பேர் பலி

6 பேர் பலி

நிலநடுக்கத்திற்குப் பிறகு, வாக்கா தனது பல மகன்களைத் தேட தொடங்கினார். அவரது மகன்கள் ஃபைசல் மற்றும் மொஹ்சின் மீட்புப் படையினர் வரும் முன்னரே உயிரிழந்துவிட்டனர். மற்றொரு மகனும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். அவரது மூத்த மகள் ஹீபா, அவரது தங்கை இஸ்ராவின் உடலை மடியில் வைத்திருந்தபடி உயிரிழந்தார். அவர்களது மற்றொரு சகோதரி சமிஹா அருகில் இறந்து கிடந்தார். இவர்கள் அனைவரது சடலங்களையும் பார்த்து அவரது தந்தை கதறி அழுத சம்பவம் காண்போர் பதற வைத்தது.

துருக்கி

துருக்கி

துருக்கி எல்லையில் அமைந்துள்ள சிரியா நாட்டின் நகரம் தான் ஜந்தாரிஸ்.. இங்கு நிலநடுக்கத்தால் பல வீடுகள் தரைமட்டமாகியுள்ளன.. அங்குப் பாதிக்கப்பட்டவர்களை மீட்புப் படையினர் காக்கத் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்கள்.. நேற்று அங்குள்ள மக்களுக்கு உதவ 14 ட்ரக்குகள் வடமேற்கு சிரியாவிற்குள் சென்றுள்ளது. சிரியா அரசுக்கு எதிராகப் போராடும் கிளர்ச்சியாளர்கள் இருக்கும் அந்த பகுதி மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு உதவும் வகையில் ஐநா இந்த டிரக்குகளை அனுப்பியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+