இன்னும் 2 நாளில் 'நல்ல செய்தி'.. ஹக்கானியுடன் ஹமீத் கர்சாய் திடீர் சந்திப்பு.. ஆப்கானில் திருப்பம்
காபூல்: தலிபான் தளபதியும் ஹக்கானி நெட்வொர்க் கிளர்ச்சிக் குழுவின் மூத்த தலைவருமான அனஸ் ஹக்கானி, ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாயை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தலிபான் அதிகாரி ராய்ட்டர்ஸிடம் செய்திநிறுவனத்திடம் தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தையின் போது கர்சாயுடன் ஆப்கானிஸ்தான் தேசிய நல்லிணக்க கவுன்சிலின் தலைவர் அப்துல்லாவும் இருந்தார்.
Recommended Video
ஆப்கானிஸ்தான் தற்போது முழுமையாக தலிபான்களின் கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது.அந்நாட்டு அதிபர் தப்பியோடிவிட்டார். புதிய அரசு அமைப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகிறது.
புதிய அரசில் ஆப்கன் மக்களுக்கான உரிமைகள், வளர்ச்சி திட்டங்கள் குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. நாட்டின் பெயர், கொடி, அரசியல் அடிப்படை உரிமை உள்பட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டு வருகிறது. 20 வருடங்களுக்கு பிறகு ஆயுதத்தின் மூலம் ஆட்சியை கைப்பற்றி உள்ள தலிபான்கள், ஆட்சி நடத்தும் முறைகளை குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து பேசிவருகிறார்கள்.

முக்கிய பங்கு
ஆகஸ்ட் 15 அன்று தலைநகர் காபூலைக் கைப்பற்றிய பிறகு ஹக்கானி நெட்வொர்க் தலிபான்களின் ஒரு முக்கிய பிரிவாக உள்ளது. இந்த நெட்வொர்க் பாகிஸ்தானின் எல்லையை அடிப்படையாகக் கொண்டது. இந்த குழு தான் பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நடந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணமாக இருந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால் இக்குழு தான் பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஹமீத் கர்சாய்
ஆப்கானிஸ்தான் அரச படைகள் தோல்வி அடைந்த நிலையில், தலிபானின் மூத்த தலைவர்களுடன் முன்னாள் ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் மற்றும் ஆப்கானிஸ்தான் தேசிய நல்லிணக்க கவுன்சிலின் தலைவர் அப்துல்லா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆப்கானிஸ்தான் தலைநகரில் தலிபான் அல்லாத உறுப்பினர்களையும் சேர்த்து எதிர்கால ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் நோக்கத்தை விரிவுபடுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகிறது.

பேச்சுவார்த்தை
மூத்த தலிபான் தலைவர் அமீர்கான் முத்தாகி இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் அரசின் முன்னாள் அரசியல் தலைவர்களுடன் ஏற்கனவே பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார். ஆகஸ்ட் 17 அன்று மேலும் ஒரு முறை பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் பு அனைத்து தரப்பையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்று முன்னதாக கூயிருந்தார்

இரண்டு நாளில்
தலிபான்கள் அந்நாட்டு மூத்த அரசியல் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பாக ஊடகத்திடம் கூறும் போது, புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான "நல்ல செய்தி" ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 20 வருடங்களில் தலிபான் தலைமையிலான அரசாங்கம் ஆட்சியில் இல்லாத போது பெறப்பட்ட உரிமைகளை எவ்வாறு கையாளும் என்பதில் கடைசி சுற்றுப் பேச்சுக்கள் பெரும்பாலும் கவனம் செலுத்தப்பட்டது என்றார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications