அகற்றப்பட்ட கொடி.. பாக். - ஆப்கான் பார்டரை கைப்பற்றிய தாலிபான்.. மொத்த நாட்டையும் கைப்பற்றுகிறதா?

Subscribe to Oneindia Tamil

காபுல்: ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே இருக்கும் முக்கியமான எல்லை பகுதி ஒன்றை தாலிபான் படைகள் கைப்பற்றி உள்ளன. இது தாலிபான் படைகளுக்கு மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

Recommended Video

    குமுறும் George Bush! | Afghanistan-லிருந்து NATO வெளியேறியிருக்க கூடாது | Oneindia Tamil

    ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வேகமாக வெளியேறி வருகிறது. அடுத்த மாதம் இறுதிக்குள் மொத்தமாக அமெரிக்க படைகள் வெளியேறிவிடும். ஆப்கானிஸ்தானில் தற்போது மிக குறைந்த நகரங்களில் மட்டுமே குறைவான எண்ணிக்கையில் அமெரிக்க படைகள் உள்ளது.

    இதை பயன்படுத்தி ஆப்கானிஸ்தானை தாலிபான் படைகள் வேகமாக கைப்பற்றி வருகிறது. ஆப்கானிஸ்தானின் 90% பகுதிகளை தாலிபான் படைகள் கைப்பற்றிவிட்டன. கிட்டத்தட்ட 300 மாவட்டங்களை தாலிபான்கள் கைப்பற்றிவிட்டது.

    எப்படி

    எப்படி

    ஏற்கனவே ஈரான் உடன் இருக்கும் எல்லை பகுதிகளை தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் கைப்பற்றிவிட்டது. இந்த நிலையில் தற்போது கூடுதலாக பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியையும் தாலிபான் கைப்பற்றி உள்ளது. வெஷ் என்ற எல்லையோர பகுதியை ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் கைப்பற்றி உள்ளது.

    சிக்கல்

    சிக்கல்

    இந்த பகுதி பாகிஸ்தானின் சமான் என்ற பகுதிக்கும், ஆப்கானிஸ்தானின் வெஷ் என்ற பகுதிக்கும் இடையில் இருக்கும் எல்லை ஆகும். இந்தியா பாகிஸ்தானின் வாகா எல்லை போல இங்கு முக்கியமான கேட் ஒன்று இருக்கிறது. இந்த எல்லை வழியாகவே பாகிஸ்தானுடன் ஆப்கானிஸ்தான் அரசு பொருளாதார ரீதியான வர்த்தகம் மேற்கொண்டது.

     வர்த்தகம்

    வர்த்தகம்

    உலகின் பல்வேறு நாடுகளுடன் ஆப்கானிஸ்தான் இந்த பகுதி வழியாகவே வர்த்தகத்தை மேற்கொண்டு வந்தது. பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய பிஸியான எல்லை பகுதியாகும் இது. இதில் ஆப்கானிஸ்தான் பக்கம் இருக்கும் பகுதிகளைத்தான் தாலிபான் கைப்பற்றி உள்ளது. தாலிபான்களுக்கு இது மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே

    ஏற்கனவே

    ஆப்கான் அரசு - பாகிஸ்தான் இடையிலான உறவை துண்டிக்கும் வகையில் இந்த தாலிபான் வெற்றி அமைந்துள்ளது. ஏற்கனவே ஆப்கானிஸ்தானின் பல்வேறு எல்லைகளான ஹெராத், ஃபாரா, குண்டூஸ் ஆகிய பகுதிகளை தாலிபான் கைப்பற்றிவிட்டது. இதனால் ஆப்கான் படைகள் வெறும் தலைநகர் என்ற அளவில் மற்றும் சுருங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விரைவில் மொத்த ஆப்கானிஸ்தானையும் பாகிஸ்தான் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+