"ஒரு வாரத்திற்கு 200 டாலர்தான்..அதற்கு மேல் வங்கியிலிருந்து எடுக்க தடை.." ஆப்கனில் புதிய கட்டுப்பாடு
காபூல்: ஆப்கன் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ள நிலையில், ஒரு வாரத்திற்கு 200 டாலருக்கு மேல் (ஆப்கன் மதிப்பில் 2000 AFS) வங்கியிலிருந்து பணமாக எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தாலிபான்கள் ஆட்சி அமைந்தது. அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கிய ஒரு சில வாரங்களிலேயே ஒட்டுமொத்த நாட்டை தாலிபான்கள் கைப்பற்றினர்.
தலைநகர் காபூலை கைப்பற்றி 10 நாட்களுக்கு மேலாகும் நிலையிலும்கூட, இன்னும் ஆப்கனில் ஆட்சி அமைக்கத் தாலிபான்களால் முடியவில்லை.

விண்ணை முட்டும் விலை
கடந்த சில மாதங்களாகவே ஆப்கன் பொருளாதாரம் தடுமாற்றத்திலேயே இருந்தது. அதிலும், தாலிபான்கள் ஆட்சி அமைந்ததும் ஆப்கன் பொருளாதாரம் பாதாளத்திற்குச் சென்றுவிட்டது. இதனால் ஆப்கானிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்தைத் தொட்டுள்ளது. ஒரு லிட்டர் பாட்டில் தண்ணீர் அமெரிக்க மதிப்பில் கிட்டத்தட்ட 3000 ஆயிரம் ரூபாய்க்கும் ஒரு பிளேட் சாப்பாடு ரூ. 7400க்கு விற்பனை செய்யப்படுகிறது. பழங்கள், பால் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலையும் விண்ணைத் தொட்டுள்ளது.

பணம் எடுக்கக் கட்டுப்பாடு
தற்போது நிலவும் சூழலை சமாளிக்கத் தாலிபான்கள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர், இருந்தாலும்கூட, அது எதுவும் பெரியளவில் பலன் அளித்ததாகத் தெரியவில்லை. இந்தச் சூழலில் ஆப்கானிஸ்தான் ரிசர்வ் வங்கிய புதியதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி அங்குள்ள மக்கள் ஒரு வாரத்திற்கு 200 டாலருக்கு மேல் (ஆப்கன் மதிப்பில் 2000 AFS) வங்கியிலிருந்து பணமாக எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விளக்கம்
ஆப்கனில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதாரமும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளது தற்காலிகமான ஒன்று தான் என்றும் விரைவில் நிலைமை சரியாகும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாகவே அங்கு பல்வேறு வங்கிகளிலும் மூடப்பட்டு வந்தன. இது தொடர்பாக ஆப்கன் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர், மக்கள் போராட்டம் அதிகரித்துள்ள நிலையில், ஆப்கன் ரிசர்வ் வங்கி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேலும், தனியார் வங்கிகள் அனைத்தும் தங்கள் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

மாத ஊதியம்
பணமாக எடுக்க மட்டுமே இப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க டிஜிட்டல் முறையில் பணத்தை அனுப்பிக் கொள்ளலாம் என்றும் இதற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால், தாலிபான்கள் காபூலைக் கைப்பற்றியதிலிருந்தே ஆப்கனில் வங்கி சேவைகள் முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதனால், பல லட்சம் பேர் ஊதியம் கூட கிடைக்காமல் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications