லண்டன், கலிபோர்னியாவில் பொங்கல் விழா கொண்டாடிய தமிழர்கள்
லண்டன்: லண்டன் மற்றும் கலிபோர்னியாவில் தமிழர் திருநாளான பொங்கலை அங்குள்ள தமிழர்கள் சிறப்பாக கொண்டாடினர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள செர்ரிடோஸ் நகரில் செர்ரிடோஸ் தமிழ் சங்கம் சார்பில் தமிழர் திருநாளாள பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் ஏராளமான தமிழர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் பொங்கல் வைத்து பரிமாறப்பட்டதுடன், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளும் நடத்தப்பட்டன.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் லண்டன் தமிழர் முன்னேற்றக் கழகம், திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி ஆகியவை சேர்ந்து கடந்த 16ம் தேதி பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடின. தமிழர் முன்னேற்றக் கழகம், திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி ஆகியவை துவங்கி நாற்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் பொங்கல் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
குத்துவிளக்கேற்றி துவங்கப்பட்ட விழாவில் தமிழ்ப் பேராசிரியரும், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளருமான திரு.சுப.வீரபாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். அவர் திருக்குறளும் அறிவியலும் என்ற தலைப்பில் பேசினார்.
தமிழர் முன்னேற்றக் கழகத்தின் 40வது ஆண்டு நிறைவையொட்டி சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. சிறப்பு மலரை சுப. வீரபாண்டியன் வெளியிட்டார். விழாவில் கவிதை, சொற்பொழிவு, ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றிருந்தன.
விழாவில் 600க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications