வங்கதேசத்தில் வெற்றி.. மோடிக்கு கொடுத்த தாரிக்கின் ரிப்ளையை கவனிச்சிங்களா! இப்படி சொல்லிட்டாரே
டாக்கா: வங்கதேசத்தில் இளைஞர்களின் புரட்சியை தொடர்ந்து நடந்த தேர்தலில், பங்களாதேஷ் தேசியவாத கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. இதன் தலைவரான தாரிக் ராஹ்மான் விரைவில் பிரதமராக பதவியேற்க இருக்கிறார். தாரிக்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதற்கு தாரிக் கொடுத்த ரிப்ளை கவனம் பெற்றிருக்கிறது.
வெற்றிக்குப் பிறகு, நாட்டு மக்களுக்கு ஆற்றிய முதல் உரையில், தேசிய ஒற்றுமைக்கு தாரிக் ராஹ்மான் அழைப்பு விடுத்தார். ஜனநாயகத்திற்காக தியாகம் செய்த மக்களுக்கு இந்த வெற்றியை அர்ப்பணித்த அவர், நாட்டின் பரந்த நலன் கருதி அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கிவைக்க வலியுறுத்தினார். வங்கதேசத்தின் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்கவிருக்கும் ரஹ்மான், அரசியல் பிரிவினைகள் இருந்தாலும் நாடு ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

ரஹ்மான் மேலும் பேசுகையில், "நம் பாதைகளும், கருத்துகளும் வேறுபடலாம். ஆனால், நாட்டின் நலன் கருதி நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். தேசிய ஒற்றுமை என்பது ஒரு கூட்டு பலம், பிளவு ஒரு பலவீனம் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்" என்று கூறினார்.
இந்தியாவுடனான உறவுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "பங்களாதேஷ் மற்றும் அதன் மக்களின் நலன்களே எங்கள் வெளியுறவுக் கொள்கையை தீர்மானிக்கும்" என்று கூறினார். முன்னதாக மோடி தாரிக்குக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இதற்க தாரிக் கொடுத்த ரிப்ளையாகவே இது பார்க்கப்படுகிறது.
தேர்தலில், BNP கூட்டணி இமாலய வெற்றியைப் பெற்றது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவியிலிருந்து நீக்கிய 2024ஆம் ஆண்டின் கொடூரமான எழுச்சிக்குப் பிறகு நடந்த முதல் தேர்தல் இதுவாகும். ஹசீனாவின் பங்களாதேஷ் அவாமி லீக் கட்சி தேர்தலில் போட்டியிடத் தடை செய்யப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தின் தகவல்படி, BNP தலைமையிலான கூட்டணி 212 இடங்களையும், ஜமாத்-இ-இஸ்லாமி தலைமையிலான கூட்டணி 77 இடங்களையும் கைப்பற்றின. அரசியல் சூழல் காரணமாக, ஷேக் ஹசீனாவின் பங்களாதேஷ் அவாமி லீக் தேர்தலில் பங்கேற்க இயலாமல் போனது.
தனது உரையை ஆதவாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதன் மூலம் ஆரம்பித்த ரஹ்மான், "ஜனநாயகத்தை நேசிக்கும், நாடு முழுவதும் உள்ள மக்கள் மீண்டும் ஒருமுறை பங்களாதேஷ் தேசியவாதக் கட்சிக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளனர். இந்த வெற்றி பங்களாதேஷுக்குச் சொந்தமானது, ஜனநாயகத்திற்குச் சொந்தமானது, ஜனநாயகத்தை விரும்பிய, அதற்காக தியாகம் செய்த மக்களுக்குச் சொந்தமானது.
நாட்டின் அரசியலில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான வழியை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம். எதேச்சதிகார ஆட்சியால் எஞ்சியிருக்கும் பலவீனமான பொருளாதாரம், அரசியலமைப்பு மற்றும் கட்டமைப்பு நிறுவனங்களின் பலவீனம், சட்டம் ஒழுங்கின் சீர்குலைவு போன்ற ஒரு சூழ்நிலையில் நாங்கள் எங்களின் பயணத்தைத் தொடங்கவுள்ளோம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications