பாப் இசை கேட்ட சிறுவனின் தலையை துண்டித்த ஐஎஸ் தீவிரவாதிகள்
ராக்கா: ஈராக்கில் பாப் இசை கேட்ட பதின்வயது சிறுவனின் தலையை வெட்டிக் கொன்றுள்ளனர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள். மேலும் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகாத இரண்டு வாலிபர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.
ஈராக்கின் மொசுல் நகர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வசம் உள்ளது. இந்நிலையில் மொசுல் நகரில் உள்ள நபி யூனுஸ் மார்க்கெட் பகுதியில் அய்ஹாம் ஹுசைன் என்ற பதின்வயது சிறுவன் தனது தந்தையின் பலசரக்கு கடையி்ல் அமர்ந்து பாப் இசைப் பாடல்களை கேட்டு ரசித்துள்ளார்.

அவரை தீவிரவாதிகள் பிடித்துச் சென்ற ஷரியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஷரியா நீதிமன்றம் அவரின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டது. இதையடுத்து பொது இடத்தில் மக்கள் முன்பு ஹுசைனின் தலை துண்டிக்கப்பட்டது.
மேலும் மொசுல் நகரில் வெள்ளிக்கிழமை அன்று ஜும்மா தொழுகையில் பங்கேற்காத இரண்டு வாலிபர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் எகிப்து பிரிவை சேர்ந்த தீவிரவாதிகள் சினாய் மாகாணத்தில் ராணுவத்திற்காக உளவு பார்த்ததாகக் கூறி இரண்டு பேரின் தலையை துண்டித்து கொலை செய்து அதை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications