பயங்கரம்.. 50 பேரை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு.. தலையை துண்டித்து.. ஐ.எஸ் தீவிரவாதிகள் வெறிச்செயல்
ஆப்பிரிக்க நாட்டில் 50 பேரின் தலையை பயங்கரவாதிகள் துண்டித்தனர்
மாபுடோ, (ஆப்பிரிக்கா): கால்பந்து மைதானத்தில், 50-க்கும் மேற்பட்டோரை இழுத்துவந்து அவர்களின் தலையை அசால்ட்டாக துண்டித்து வீசி விட்டு போயுள்ளனர் ஐஎஸ் பயங்கரவாதிகள்.. இப்படி ஒரு வெறிச்செயல் ஆப்பிரிக்க நாட்டில் நடந்துள்ளது!
தென்ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மொசாம்பிக்... இந்த நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கபோ டெல்போ மாகாணத்தில் கடந்த 2017-ல் இருந்து ஐஎஸ் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் ஐஎஸ் பயங்கர அமைப்பு, அதன் ஆதரவு பெற்ற அல் ஷபாப் பயங்கரவாத இயக்கம், அல்கொய்தா உள்பட பல்வேறு பயங்கரவாத குழுக்கள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அப்போதிருந்தே இங்கு காலூன்ற பல்வேறு தாக்குதல்களையும் நடத்தி வருகின்றனர்.

பொதுமக்கள்
இவர்களுக்கு மத அடிப்படையிலான அரசை நிறுவ வேண்டும் என்பதுதான் நோக்கம்.. அதற்காக அங்குள்ள அரசு படைகளுடன் நேரடியாக சண்டையிட்டு வருகின்றனர்... இந்த சமயத்தில் அப்பாவி பொதுமக்கள் என்றெல்லாம் யாரையுமே பார்ப்பதில்லை. சரமாரியாக கொன்று குவித்து கொண்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.. குறிப்பாக கிராமங்களில் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களை குறிவைத்தே இந்த கொடூர தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கிராம மக்கள்
இந்நிலையில், மறுபடியும் ஒரு தாக்குதல் நடந்துள்ளது.. கபோ டெல்போ மாகாணத்தில் நஞ்சாக என்ற கிராமம் உள்ளது.. இங்கு திடீரென கிட்டத்தட்ட 100 பயங்கரவாதிகள் திபுதிபுவென உள்ளே நுழைந்துவிட்டனர். அவர்கள் எல்லார் கையிலும் பயங்கரமான ஆயுதங்கள் இருந்தன.. அங்கிருந்த வீடுகளுக்கு மளமளவென தீ வைத்தனர்.. பிறகு கிராம மக்கள் பலரை துப்பாக்கி முனையில் கடத்தியும் சென்றனர்.

தலை துண்டிப்பு
50-க்கும் மேற்பட்டோரை தரதரவென ஒரு மைதானத்துக்கு இழுத்து போனார்கள்.. அந்த மைதானம் கால் பந்து விளையாடுவதற்காக கிராம மக்களே உருவாக்கியது.. அந்த மைதானத்துக்குள் இழுத்து சென்ற பயங்கரவாதிகள், எல்லாரையுமே தலைகீழாக தொங்கவிட்டு, ஒவ்வொருவரின் தலையையும் துண்டித்து மிக கொடூரமாக கொலை செய்தனர்... இப்படியே 50 தலைகள் தரையில் ரத்தம் தெறிக்க விழுந்தன.

கடத்தல்
இந்த கொடுஞ்செயலை கண்டு கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.. கொல்லப்பட்டவர்களின் உடல்களை, பயங்கரவாதிகள் அங்கும் இங்கும் வீசிவிட்டு தப்பினர்.. இதைதவிர, மேலும் சில பெண்களையும், குழந்தைகளையும் அவர்கள் கடத்தி கொண்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக மொசாம்பிக் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications