கிறிஸ்துமஸ் தாத்தா போல் உடையணிந்து இரவு விடுதியில் துப்பாக்கிச்சூடு: 39 பேர் பலி!
துருக்கியில் இரவு விடுதியொன்றில் கிறிஸ்துமஸ் தாத்தா போல் உடையணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் புத்தாண்டு கொண்டாடியவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 39 பேர் உயிரிழந்தனர்.
இஸ்தான்புல்: துருக்கியில் இரவு விடுதி ஒன்றில் புத்தாண்டை கொண்டாடிய மக்கள் மீது கிறிஸ்துமஸ் தாத்தா போல் உடையணிந்து வந்த தீவிரவாதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 39 பேர் பலியாயினர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள இரவு விடுதியில் புத்தாண்டையொட்டி மக்கள் நேற்றிரவு கேளிக்கை நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது கிறிஸ்துமஸ் தாத்தா போல் உடையணிந்த 2 பேர் கேளிக்கை விடுதிக்குள் புகுந்தனர்.

கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு ஆடிபாடிக்கொண்டிருந்தவர்கள் மீது அவர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 39 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் அரபு மொழியில் பேசியதாக கூறப்படுகிறது.
விடுதியில் 700க்கும் மேற்பட்டோர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள்வெளியாகியுள்ளன. துருக்கியில் குர்திஷ் தீவிரவாதிகளும், இஸ்லாமிய ஜிகாதிகளும் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் இஸ்தான்புல்லில் கால்பந்தாட்டப்போட்டியின் போது நடத்தப்பட்ட இரட்டை வெடிகுண்டுதாக்குதலில் 1,044 பேர் கொல்லப்பட்டனர். ஜூன் மாதம் நடந்த தற்கொலைப் படைத்தாக்குதலில் 47 பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications