எகிப்து மசூதியில் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்.. தொழுகைக்கு வந்த 235 பேர் பலி
எகிப்தில் உள்ள மசூதி ஒன்றில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 235 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சீனாய் : எகிப்தில் உள்ள மசூதி ஒன்றில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 235 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எகிப்தின் சீனாய் தீபகற்பத்தில் இந்த தாக்குதல் நடந்து இருக்கிறது.
எகிப்தின் சீனாய் தீபகற்பத்தில் உள்ள மசூதி ஒன்றில் இன்று மாலை திடீர் என்று தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. மசூதியில் தொழுகை முடித்துவிட்டு மக்கள் திரும்பும் போது இந்த கொடூர தாக்குதல் நிகழ்ந்து இருக்கிறது.

கையில் பெரிய துப்பாக்கிகளுடன் உள்ளே நுழைந்த தீவிரவாதிகள் கண்முடித்தனமாக தாக்குதல் நடத்தினர். மேலும் கையெறி குண்டுகளை அந்த மசூதிக்குள் வீசியுள்ளனர்.
இந்த கொடூரமான தாக்குதலில் 235 பேர் மரணம் அடைந்துள்ளனர். 120 பேர் காயம் அடைந்துள்ளனர். மரணம் அடைந்த 185 பேரில் 40 பேர் போலீஸ்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதலில் பெரும்பாலும் 'சுஃபி' வாழ்க்கை முறையை பின்பற்றும் மக்கள் குறிவைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் யார் என்று கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த தாக்குதலை நடத்தியது எகிப்தில் இருக்கும் 'சீனாய் கிளர்ச்சி இயக்கம்' என்ற தீவிரவாத இயக்கமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும் இதில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் எகிப்த் அதிபர் முகமது மோர்சி பதவி விலகிய நாளில் இருந்து அங்கு தீவிரவாத தாக்குதல்கள் அதிகமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications