வேற லெவல்.. பிளஷ் வைத்த டாய்லெட்டாம்.. அதுவும் 2400 வருஷம் முன்னாடியே.. கண்டுபிடிச்சது யார்னு பாருங்க
இந்த டாய்லெட்டை பயன்படுத்தியவர்கள் தண்ணீரையும் சுத்தப்படுத்தி பயன்படுத்தியுள்ளனர் என்பதுதான் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெய்ஜிங்: உலகின் மிகவும் பழமையான கழிப்பறையை சீனாவில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு முன்னர் இவ்வளவு ஆண்டுகள் பழமையான கழிப்பறையை கண்டுபிடித்தது கிடையாது என்றும், இது குறித்த ஆராய்களிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
மனிதன் நாகரீகமடைய தொடங்கிய காலத்தில் நவீன கண்டுபிடிப்புகள் அன்றாட வாழ்க்கையையே புரட்டி போட்டுவிட்டது. அப்படி ஒரு கண்டுபிடிப்புதான் இந்த டாய்லெட். மனிதனின் வாழ்க்கையை சுகாதாரமானதாக மாற்றி வாழ்நாளை நீட்டிக்க செய்ததில் இதற்கு முக்கியமான பங்கு இருக்கிறது. டாய்லெட் கண்டு பிடிக்கப்படாததற்கு முன்னர் ஏராளமான சுகாதார சீர்கேடுகளை மனிதர்கள் எதிர்கொள்ள வேண்டி இருந்தது.

குறிப்பாக குடிநீர் அதிக அளவில் மாசடைந்ததால் அதன் மூலம் காலரா உள்ளிட்ட நோய்கள் பரவியது. இதனையடுத்து கழிப்பறைகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தன. தற்போது நாம் பயன்படுத்தும் நவீன கழிப்பறைகளுக்கு முன்னோடி 1959ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த கழிப்பறை முதலாம் எலிசபெத்துகாக உருவாக்கப்பட்டது. பின்னர் மெல்ல பரிணாமமடைந்து தற்போது அனைவரின் பயன்பாட்டுக் வந்திருக்கிறது.
ஆனால் சீனாவின் யூயாங்கில் உள்ள ஒரு அரண்மனையில் இடிபாடுகளை ஆய்வு செய்துக்கொண்டிருந்த ஆய்வாளர்கள் மேற்குறிப்பிட்டதைவிட பழமையான டாய்லெட்டை கண்டுபிடித்துள்ளனர். இது சுமார் 2,400 ஆண்டுகள் பழமையானதாகும். அதாவது கி.மு 424ம் ஆண்டிலேயே சீனர்கள் இதனைய பயன்படுத்தியுள்ளனர். இதுகுறித்து அந்நாட்டின் சமூக அறிவியல் தொல்லியல் கழகத்தின் ஆராய்ச்சியாளர் லியு ரூய் கூறுகையில், "நாங்கள் இதனை எதிர்பார்க்கவில்லை. உண்மையில் இதைபார்த்தபோது அனைவரும் சத்தமாக சிரித்துவிட்டோம். மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
இந்த டாய்லெட்டை பயன்படுத்தியவர்கள் தண்ணீரையும் சுத்தப்படுத்த பயன்படுத்தியுள்ளனர் என்பதுதான் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை பிற்கால ஹான் அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் பயன்படுத்தியிருக்க வேண்டும். சரியாக சொல்வதெனில் அரசர் கின் சியாகோங் அல்லது அவரது தந்தை கின் சியான்கோங் இதனை பயன்படுத்தி இருக்கலாம். ஒவ்வொரு முறை கழிப்பறையை பயன்படுத்திய பின்னர் ஊழியர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை வைத்திருப்பார்கள். வேலை முடிந்தவுடன் தண்ணீர் கொண்டு கழிவறை சுத்தம் செய்யப்படும்.
பழங்கால சீனர்கள் சகாதாரத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. நாங்கள் இந்த மண்ணிலிருந்து சில மாதிரிகளை சேகரித்துள்ளோம். அவற்றை ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம் அக்காலத்தில் மக்கள் என்ன வகையான உணவுகளை உண்டனர் என்பதை கண்டுபிடிக்க முடியும்" என்று கூறியுள்ளார். தற்போது இந்த கழிப்பறையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications