இரக்கம் காட்டாத இஸ்ரேல்.. லெபனானுக்கு இடையேயான போரில் கொடூரம்! பிஞ்சுக் குழந்தைகளை கூட விடவில்லை !?

Subscribe to Oneindia Tamil

பெய்ரூட் : இஸ்ரேல் நடத்திய பேஜர் தாக்குதலுக்கு பதிலடியாக லெபனான் நாட்டில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் ராக்கெட் தாக்குதல் நடத்திய நிலையில், தற்போது ஹிஸ்புல்லா அமைப்பினரை குறி வைத்து இஸ்ரேல் கொடூரமாக பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேலின் கோரத் தாக்குதலில் விமானப்படை தளபதி பலியான நிலையில், பலி எண்ணிக்கை 700ஐ கடந்துள்ளதோடு, அதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பச்சிளம் குழந்தைகள் என்ற பகீர் தகவல் வெளியாகி இருக்கிறது.

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வரும், நிலையில் கடந்த ஆண்டு முதல் அங்கு தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி முதல் இஸ்ரேலின் நடவடிக்கை பதில் கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

israel hezbollah international

மேலும் இஸ்ரேலுக்குள்ளேயே நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டு மக்களையும் வெளிநாட்டு மக்களையும் கொன்று வருவதாகவும், பலரை பணைய கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டி வருகிறது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா பகுதியில் போர் விமானங்கள் மூலமாகவும் ஏவுகணைகள் மூலமாகவும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. போர் தொடங்கி பல மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில் அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் கொல்லப்படுவதாக ஹமாஸ் குற்றம் சாட்டி வருகிறது. மேலும் லட்சக்கணக்கானோர் அகதிகளாக பிற பகுதிகளுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் போர் காரணமாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் மீது இஸ்ரேல் ராக்கெட் லாஞ்சர் மூலம் தாக்குதல் நடத்தி வருவதாக புகார் எழுந்திருக்கிறது. மேலும் ஐநா ஊழியர்கள் உள்ளிட்ட 30 பேர் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், ஹமாஸ் அமைப்பினர் அங்கு இருந்ததால் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் விளக்கம் அளித்தது.

இதற்கிடையே கடந்த 17ஆம் தேதி தெற்கு லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் பல பேஜர்கள் திடீர் திடீரென வெடித்தன. குறிப்பாக ஹிஸ்புல்லா ஆயுத குழுவினர் வைத்திருந்த பேஜர்கள் அடுத்தடுத்து வெடித்ததாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து பேஜர் வெடிப்புகள் நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் பெய்ரூட்டின் புறநகர் பகுதிகளிலும் ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர்கள் வெடித்துச் சிதறின. லெபனான் மட்டுமல்லாது அந்நாட்டுக்கு வெளியேயும் பேஜர் வெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

நாட்டில் சுமார் 1000 பேஜர்கள் வெடித்து சிதறியாக கூறப்படும் நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த 37 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 2800க்கு மேற்பட்டோர் காயமடைந்து இருப்பதாகவும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் தாக்குதல் குறித்து இஸ்ரேல் இதுவரை வாய் திறக்கவில்லை. அதே நேரத்தில் இஸ்ரேல் தான் தாக்குதலுக்கு காரணம் என ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்குமா வகையில் இஸ்ரேல் ஹிஸ்புல்லா மீது தாக்குதலை தொடங்கி இருக்கிறது.

போர் விமானங்கள், ராக்கெட் லாக்கர்கள் உள்ளிட்டவை மூலம் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் 700-க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது. போர் காரணமாக சுமார் ஒரு லட்சம் மக்கள் இடம் பெயர்ந்து உள்ள நிலையில் தரைவழி தாக்குதலுக்கும் தயாராகி வருவதாக இஸ்ரேல் அதிரடியாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கூறியுள்ளனர்.

இதுவரை நடந்துள்ள தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் பலியாகி இருப்பதாகவும், போர் நிறுத்தத்திற்கான நேரம் இது, அமைதி பேச்சு வார்த்தைக்கு லெபனான்-இஸ்ரேல் முன் வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. இந்த நிலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் விமானப்படை தளபதியான முகமது உசைன் ஸ்ரோர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து ஹிஸ்புல்லாவுக்கு எதிராக லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. அதே நேரத்தில் ஐநா உள்ளிட்ட உலக நாடுகள் தலையிட்டு போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+