வடகொரியா மீதான பொருளாதார தடை நீடிக்கும்.. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
வடகொரியா மீதான பொருளாதார தடை நீடிக்கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
Recommended Video

சிங்கப்பூர்: வடகொரியா மீதான பொருளாதார தடை நீடிக்கும் என்றும் அணு ஆயுதங்களை முழுமையாக அழித்தால் தான் வடகொரியா மீதான பொருளாதார தடை நீக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா - வடகொரியா தலைவர்கள் இன்று சந்தித்துள்ளனர். அமெரிக்க அதிபர் ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் இன்று பெரும் எதிர்பார்ப்புக்கிடையே சந்தித்துப் பேசினர்.
சிங்கப்பூரில் உள்ள செந்தோசா தீவில் இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நிகழ்ந்தது. பலத்த பாதுகாப்புக்கிடையே இந்த சந்திப்பு நடைபெற்றது.

அற்புதமான நாடு
இதைத்தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, வடகொரியா நாடு அற்புதமான இடமாக இருக்க சாத்தியம் உள்ளது.

அழிக்க தொடங்கிவிட்டார்
கிம்முடனான சந்திப்பு நேர்மையானதாக, ஆக்கப்பூர்வமானதாக இருந்தது. பிரதான அணு ஆயுத சோதனை தளத்தை அழிக்க தொடங்கிவிட்டார் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன். ஏவுகணை தளங்களை அழிப்பதாக வடகொரியா உறுதியளித்துள்ளது.

கிம் புத்திசாலி
கிம் புத்திசாலி.. சிறுவயதில் ஆட்சியில் அமர்ந்துள்ளார். யார் வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம் ஆனால் அமைதி பேச்சுவார்த்தை நடத்த ஒரு துணிச்சல் வேண்டும்.

விரைவில் இணையும்
கிம்முடன் மனித உரிமைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. வடகொரியா, தென்கொரியாவில் பிரிந்துள்ள குடும்பங்கள் விரைவில் ஒன்றிணையும்.

பொருளாதார தடை தொடரும்
வடகொரியா மீதான பொருளாதார தடை தொடரும். அணு ஆயுதங்களை வடகொரியா முழுமையாக அழித்த பின்னரே பொருளாதார தடை நீக்கப்படும்.

கசப்புணர்வு மறைந்துள்ளது
கிம் ஜாங் உன்னை அமெரிக்கா வருமாறு அழைப்பு விடுத்துள்ளேன். வடகொரியா - அமெரிக்கா இடையே கசப்புணர்வு மறைந்துள்ளது.












Click it and Unblock the Notifications