சொல்லாம கொள்ளாம "செய்ய"க் கூடாது... இங்கிலாந்துக்காரருக்கு கோர்ட் போட்ட அதிரடி தடை!
லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு நபருக்கு, பெண்ணுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் "24 மணி நேரத்துக்கு" முன்பு கோர்ட்டுக்குத் தகவல் தெரிவித்து "பெர்மிஷன்" வாங்க வேண்டும் என்று கோர்ட் ஒன்று போட்டுள்ள அதிரடி உத்தரவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அடுத்த விசாரணை நான்கு மாதம் கழித்து வருகிறது. அதுவரை இந்த உத்தரவு தொடரும் என்றும் கோர்ட் குண்டைப் போட்டுள்ளது அந்த நபரின் செக்ஸ் ஆசையில்.
இங்கிலாந்தில், பொதுமக்களுக்கு ஒரு நபரால் அபாயம் அதிகம் இருக்கிறது என்று காவல்துறை நினைத்தால் அப்படிப்பட்ட நபர்களுக்கு எதிராக இதுபோன்ற உத்தரவை காவல்துறை கோர்ட்டில் கோர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் பிரிவின் கீழ்தான் தற்போது இந்த நபருக்கு இப்படிப்பட்ட தடையைப் பிறப்பித்துள்ளது கோர்ட்.

வடக்கு யார்க்ஷயரில்
வடக்கு யார்க்ஷயர் காவல்துறையின் கோரிக்கையின் பேரில் இந்த உத்தரவை யார்க் மாஜிஸ்திரேட் கோர்ட் பிறப்பித்துள்ளது. இதற்கு முன்பும் இதேபோன்ற தடை அந்த நபருக்குப் பிறப்பிக்கப்பட்டிருந்தது. அது காலாவதி ஆனதைத் தொடர்ந்து தற்போது புது உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.

பெயர் அட்ரஸ் ப்ளீஸ்!
இந்த நபருக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவின்படி, இவர் யாருடனாவது செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்பினால் முதலில் அந்தப் பெண்ணின் பெயர், வயது, முகவரி, எங்கே வசிக்கிறார் என்பது போன்ற தகவல்களை கோர்ட்டுக்குத் தெரிவிக்க வேண்டும்.

24 மணி நேரத்துக்கு முன்னாடியே
மேலும் செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்பினால் அதுகுறித்து 24 மணி நேரத்திற்கு முன்பே இந்த விவரத்தைச் சொல்லி பெர்மிஷன் வாங்க வேண்டும்.

சொல்லாட்டி ஜெயில்
சொல்லாமல் கொள்ளாமல் செக்ஸ் வைத்துக் கொண்டது தெரிய வந்தால் உடனடியாக அவரை சிறையில் அடைக்க உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்டர்நெட் பார்க்கக் கூடாது
மேலும் இந்த நபருக்கு இன்டர்நெட்டைப் பார்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் இவர் எதையும் பாக்காத வகையில் இவரது கம்ப்யூட்டர், செல்போன் உள்ளிட்டவற்றை போலீஸார் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுள்ளனராம்.

அரசு அலுவலகத்தில் போய்ப் பார்க்கலாம்
அதேசமயம், அரசு அலுவலகங்களுக்குச் செல்லும்போது அங்கு வைத்து இன்டர்நெட்டைப் பார்க்கத் தடை இல்லையாம்.

அந்த "மகான்" யாருப்பா!
இப்படிப்பட்ட தடைக்குள்ளாகி, பெரும் இக்கட்டில் சிக்கியுள்ள அந்த "மகானின்" பெயரை போலீஸார் வெளியிட மறுத்துள்ளனர். சட்டப்படி அப்படிச் சொல்லக் கூடாதாம்.
சர்தான் எஜமான்!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications