அமெரிக்காவில் திடீர் துப்பாக்கி சூடு... விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 3 பேர் பலி
முகில்டியோ: அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியின்போது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் சியாட்டல் நகரின் முகில்டியோ பகுதியில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் நேற்றிரவு பார்ட்டி நடைபெற்றுள்ளது. 15 முதல் 20 பேர் வரை இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

திடீரென உள்ளே புகுந்த மர்ம நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு தாக்குதல் நடத்தியதில் 3 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தேடுதல் வேட்டையைத் தொடங்கிய போலீசார், 2 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்தனர். லெவிஸ் கவுண்டியில் சிக்கிய அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தீவிரவாத தாக்குதலாக இருக்க வாய்ப்பில்லை எனவும்,முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் எனவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. சமீப காலமாக ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய நாடுகளில் தனி மனித தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications