துபாயில் போலிச் சான்றிதழ் வேண்டி லஞ்சம் கொடுத்த 3 இந்தியர்களுக்கு சிறை
துபாய்: ஹைபிடைட்டிஸ்-பி இல்லையென கூறி, ஆரோக்கியச் சான்றிதழ் கேட்டு சுகாதார ஆய்வாளருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற 3 இந்தியர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது துபாய் நீதிமன்றம்.
துபாயில் நோய் பரவக் கூடிய இடங்களில் பணி புரிபவர்கள் ஆண்டுக் கொருமுறை தங்கள் ஆரோக்கியம் குறித்தான சான்றிதழ் சமர்ப்பிப்பது நடைமுறை வழக்கம். இந்நிலையில் துபாயில் உள்ள சிகை அலங்கார நிலையத்தில் பணி புரிந்து வந்த இந்தியர் ஒருவருக்கு கொடிய நோய் கிருமியான 'ஹெபிடைட்டிஸ்-பி' எனப்படும் கிருமியின் தாக்கம் ஏற்பட்டது.
எனவே, தனது நண்பருக்கு உள்ள 'ஹெபிடைட்டிஸ் - பி' நோய் தொற்றை மறைத்து அவர் ஆரோக்கியமாக உள்ளதாக சான்றிதழ் வழங்க வேண்டும் எனக் கேட்டு இந்தியர் ஒருவர் துபாய் சுகாதார ஆய்வாளருக்கு போன் செய்துள்ளார்.
சுகாதார ஆய்வாளர் அக்கோரிக்கையை மறுத்து விடவே, மறுநாள் அவரது அலுவலகத்திற்கு வந்த அந்த ஆசாமி, 'ஏற்கனவே உங்கள் அலுவலகத்தில் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு நலமாக உள்ளதாக சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. நீங்களும் எனது நண்பருக்கு அதுபோல் சான்றிதழ் அளிக்க வேண்டும். உங்களுக்கு ஆயிரத்து ஐநூறு திர்ஹம் பணம் தருகிறேன்' எனக் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சுகாதார அதிகாரி இது குறித்து தனது மேலதிகாரிக்கு தகவல் அளித்தார். அதனைத் தொடர்ந்து, லஞ்சம் தர முயன்றவர்களை கையும் களவுமாக பிடிக்க திட்டம் வகுத்த போலீசார், அதோடு சேர்த்து இதுவரை தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலமாக இருப்பது போல் சான்றிதழ் வழங்கியவர்களை பிடிக்கவும் முடிவு செய்தனர்.
அதன்படி, லஞ்சம் தந்து போலி சுகாதார சான்றிதழ் பெற முயன்ற 3 இந்தியர்கள் மீதும் துபாய் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், குற்றவாளிகள் என விசாரணையில் உறுதியான மூவருக்கும் ஓராண்டு சிறை தண்டனை மற்றும் 600 திர்ஹம் அபராதம் விதிக்கப்பட்டது. தண்டனை காலம் முடிந்த பின்னர் மூவரையும் துபாயை விட்டு வெளியேற்றும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications