கொத்து கொத்தாக.. சீனாவின் டாப் பிஸ்னஸ் நகரங்களில்.. ஏரியாவுக்கு ஏரியா லட்ச கணக்கில் கொரோனா.. ஷாக்!
பெய்ஜிங்: சீனாவில் இருக்கும் பெரும்பாலான தொழிற்நகரங்களில் கொரோனா கேஸ்கள் லட்சக்கணக்கில் பதிவாகி வருகிறது. ஓமிக்ரான் BF.7 மற்றும் BF.12 வகை கொரோனா காரணமாக சீனாவில் இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
2020ல் உலகம் முழுக்க கொரோனா தீவிரமாக பரவிய போதும் சீனாவில் 88 ஆயிரம் கேஸ்களுக்கு மேல் பதிவாகவில்லை. சீனாவில் மிக தீவிரமான கட்டுப்பாடுகள் காரணமாக கேஸ்கள் பரவாமல் தடுக்கப்பட்டது. சீனாவில் ஒரு மாதத்தில் மொத்தமாக 10 கேஸ்கள் வந்தால் கூட அது ஆச்சர்யம்தான். அந்த அளவிற்கு சீனாவில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.
சீனாவில் கொரோனா காரணமாக இதுவரை ஏற்பட்ட மொத்த பலி எண்ணிக்கையே கடந்த மாதத்திற்கு முன்பு வரை 4,836தான். அந்த அளவிற்கு அங்கு கட்டுப்பாடுகள் போடப்பட்டு, மொத்தமாக வைரஸ் பரவல் தடுக்கப்பட்டன. சீனாவில் இதற்காக ஜீரோ கோவிட் அல்லது ஜீரோ டாலரான்ஸ் என்ற முறை அமலில் இருந்தது.

ஜீரோ கோவிட்
அதாவது ஒரு வீட்டில் ஒருவருக்கு கொரோனா ஏற்படுகிறது என்றால் அவரை மட்டும் தனிமைப்படுத்த மாட்டார்கள். அவரின் வீட்டை சீல் செய்வார்கள். வீட்டை சீல் செய்ததோடு மொத்தமாக அவர்களின் தெருவையும் சீல் செய்வார்கள். அவர் சந்தித்த நபர்கள் எல்லோரையும் கண்டுபிடித்து எல்லோரின் வீடுகளையும் 15 நாட்களுக்கு சீல் செய்வார்கள். இப்படித்தான் அங்கு கொரோனா பரவாமல் தடுத்து வந்தனர். உலகம் முழுக்க 3 அலைகள் ஏற்பட்ட போதும் சீனாவில் பெரிய அலை எதுவும் ஏற்படாமல் இருக்க இது முக்கிய காரணமாக இருந்தது. முக்கியமாக சீனாவில் பெரிய பிஸ்னஸ் நகரங்களில் எங்கும் கொரோனா பாதிப்பு அதிகம் இல்லை.

கொரோனா
பெரிய பிஸ்னஸ் நகரங்களான ஷாங்காய், பெய்ஜிங், குவாங்சூ, ஷென்சென், தியான்ஜின் போன்ற நகரங்களில் எல்லாம் பெரிதாக கொரோனா கேஸ்கள் பதிவாகவில்லை. ஆனால் தற்போது இதே நகரங்களில் தினசரி கேஸ்கள் 10 லட்சத்திற்கும் அதிகம் பதிவாகி உள்ளது. ஷாங்காய் அருகே இருக்கும் ஜெஜியாங் நகரத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் 10 லட்சம் கேஸ்கள் பதிவாகி உள்ளது. இது சென்னையை போன்ற பெரிய தொழிற் நகரம் ஆகும். சென்னை என்ற ஒரே நகரத்தில் ஒரே நாளில் 10 லட்சம் கேஸ்கள் பதிவானால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இங்கும் கேஸ்கள் பதிவாகி உள்ளன. அதிக பிஸ்னஸ் நடக்கும் ஷாங்காய், பெய்ஜிங், குவாங்சூ, ஷென்சென், தியான்ஜின் போன்ற நகரங்களில் எல்லாம் இதுதான் நிலைமையாக உள்ளது.

5 நாட்கள்
கடந்த 5 நாட்களாக அங்கு மிக தீவிரமாக கேஸ்கள் அதிகரித்து வருகிறது. சீனாவில் நேற்று முதல்நாள் மட்டும் 3.7 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதாவது கிட்டத்தட்ட கேரளாவின் மக்கள் தொகை மொத்தமாக ஒரே நாளில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டால் எப்படி இருக்கும். அந்த அளவிற்கு சீனாவில் ஒரே நாளில் கேஸ்கள் ஏற்பட்டு இருக்கின்றன. நேற்று ஒரே நாளில் இந்த பாதிப்பு அங்கு பதிவாகி உள்ளது. உலக அளவில் இது புதிய ரெக்கார்ட் ஆகும். சீனாவின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 24.8 கோடி பேர் அங்கு கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது கிட்டத்தட்ட 18 சதவிகிதம் பேர் அங்கு கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்

ஏன் இப்படி?
கிட்டத்தட்ட ஏரியாவிற்கு ஏரியா 1 லட்சம் கேஸ்கள் பதிவாகி உள்ளன. இதற்கு காரணம் உள்ளது. ஜீரோ கோவிட் விதிகள் காரணமாக முதல் மூன்று அலைகளில் பலருக்கு கொரோனா ஏற்படவில்லை. அப்போது தப்பித்தவர்கள் யாருக்கும் கொரோனா எதிர்ப்பு சக்தி இல்லை. அந்நாட்டின் சினோபார்ம் வேக்சின் கூட அவ்வளவு வலிமை வாய்ந்ததாக இல்லை. இதனால் வேக்சின் எடுத்தவர்களுக்கும், கொரோனா பாதிக்கப்படாதவர்களுக்கும் அங்கு கொத்து கொத்தாக கொரோனா ஏற்பட்டு வருகிறது. இந்த கொரோனா டிரெண்ட் வரும் நாட்களிலும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications