தயார் நிலையில் இருங்கள்.. முப்படைகளுக்கு அறிவித்த பென்டகன்.. தீவிர ஆலோசனையில் டிரம்ப்.. போரா?
ஈரானுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்நாட்டின் முப்படை தளபதிகள் உடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
Recommended Video
டெஹ்ரான்: ஈரானுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்நாட்டின் முப்படை தளபதிகள் உடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று மாலைக்குள் இதற்கு பதில் தாக்குதல் நடத்தப்படும் என்று கூறுகிறார்கள்.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் கடந்த வாரம் டிரோன் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த நிலையில்தான் ஈரான் அமெரிக்க இடையே சண்டை தொடங்கியது.
பாக்தாத்தில் இருக்கும் அமெரிக்க படைகளை ஈரான் தாக்க தொடங்கி உள்ளது. அமெரிக்க படைகளின் அல் அசாத் விமான தளம் மீது ஈரான் அடுத்தடுத்து 12 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது.

எப்படி தாக்குதல்
இந்த தாக்குதல் தொடர்பாக தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறார். வெள்ளை மாளிகையில் இருக்கும் வார் ரூமில் இந்த ஆலோசனை நடந்து வருகிறது. முப்படை தளபதிகள் அங்கு உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லை
அமெரிக்காவின் எல்லையை சுற்றி இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. அமெரிக்காவின் விமான படை தளங்கள், ராணுவ தளங்கள் மீதுதான் தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் கூறியது. தற்போது அதேபோல் ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது.

உலகம் முழுக்க
இதனால் உலகம் முழுக்க அமெரிக்காவிற்கு இருக்கும் 100க்கும் மேற்பட்ட ராணுவ தளவாடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இன்று மாலைக்குள் இதற்கு பதில் தாக்குதல் நடத்தப்படும் என்று கூறுகிறார்கள். இது தொடர்பாகத்தான் டிரம்ப் முப்படை தளபதிகள் உடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

பதில்
இந்த தாக்குதலை அடுத்து அமெரிக்கா ராணுவ தலைமையகமான பென்டகனும் போர் நடத்த தயார் ஆகியுள்ளது. இதற்கான ஈராக் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் அமெரிக்க படைகளை தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தி உள்ளது.
-
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications