அந்த பேச்சு பேசுன டிரம்ப்! இப்போ பொட்டி பாம்பா பதுங்குறாரே! கனடா பிரதமருக்கு என்ன சொன்னாருனு பாருங்க
வாஷிங்டன்: கனடாவை 51வது மாகாணமாக மாற்றுவோம் என்று கொக்கரித்திருந்த டிரம்ப், தற்போது அந்நாட்டின் புதிய பிரதமருக்கு வாழ்த்து கூறியுள்ளார். மட்டுமல்லாது வெளியுறவுத்துறை விவகாரங்களில் இணைந்து பணியாற்ற தயார் என்றும் கூறியிருக்கிறார்.
கனடா மீது வரியும் போட்டு, அந்நாட்டை அமெரிக்காவுடன் இணைத்துக்கொள்கிறோம் என்றும் கூறி சர்ச்சையை கிளப்பியிருந்த டிரம்ப், தற்போது கனடாவுடன் இணக்கம் ஆகியுள்ளார்.

கனடா பிரதமர் தேர்தலில் லிபரல் கட்சியை சேர்ந்த மார்க் கார்னி வெற்றி பெற்றிருக்கிறார். அவருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். பக்கத்து நாட்டில் பிரதமர் அதிபர் தேர்தல்களில் வெற்றிப் பெறுபவர்களுக்கு வாழ்த்துகளை பகிர்ந்துக்கொள்வது சாதாரண ஒன்றுதான். இருப்பினும் கனடாவுக்கும், டிரம்ப்புக்கும் இடையிலான உறவு சாதாரணமானது கிடையாது. சீனா நம் நாட்டை அவர்களுடன் இணைத்துக்கொள்வதாக சொன்னால் நமக்கு எந்த அளவுக்கு கோபம் வருமோ அந்த அளவுக்கு கனடா டிரம்ப் மீது கடுப்பாக இருக்கிறது.
காரணம் கனடாவை 51வது மாகாணமாக அமெரிக்காவுடன் இணைத்துக்கொள்கிறேன் என்று டிரம்ப் பேசியிருந்தார். சரி அத்துடன் நின்றாரா? இல்லையே! கனடாவிலிருந்து போதை பொருள் வருது, சீன தயாரிப்பு பொருள் வருது என்று சொல்லி, அந்நாட்டிற்கு வரி மேல் வரியை போட்டு தள்ளினார். இதனைக்கும் கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்துதான் அமெரிக்காவுக்கு தேவையான கார்கள் உற்பத்தியாகின்றன. இப்படி இருக்கையில், டிரம்ப் போட்ட வரியால் சொந்த நாட்டு மக்களே அதிகம் பாதிக்கப்பட்டனர் என்பது தனிக்கதை.
ஆனாலும் அதைப்பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாத டிரம்ப், தனது நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்தார். இந்த நிலையில்தான் கனடாவில் தேர்தல் நடந்திருக்கிறது.
நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் டிரம்ப் என்ன சொல்லியிருக்கனும்? வாழ்த்துகள் சொல்லி அதோடு நிறுத்தியிருக்கனும். ஆனா, "கனடாவுடன் அமெரிக்கா ஒருங்கிணைந்து செயல்பட உறுதியாக இருக்கிறது" என்று கூறியிருக்கிறார். மட்டுமல்லாது வர்த்தகம், குடியேற்றம் மற்றும் சீனாவை எதிர்கொள்ளும் விஷயம் உள்ளிட்டவற்றிலும் கனடாவின் ஒத்துழைப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளார். நீதான் ரோஷமான ஆளாச்சே.. ஏன் இப்போ கனடாவின் தயவை நாடுற? என்று பலரும் டிரம்ப்பை சோஷியல் மீடியாவில் வதைக்க தொடங்கியுள்ளனர்.
முன்னதாக தேர்தல் வெற்றியை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனடாவின் புதிய பிரதமர் மார்க் கர்னி, "எங்கள் நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதும், பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்வதும்தான் முதல் வேலை. அமெரிக்காவின் நடவடிக்கைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கன்றன. எனவே நாம் அதை மறந்துவிடக்கூடாது. நம்மால் நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். நமக்கு அமெரிக்கா மட்டும்தான் வாய்ப்பு என்று கிடையாது. வெளியில் பல தேர்வுகள் இருக்கின்றன" என்று கூறியிருக்கிறார்.
இப்படி கர்னி பேசியிருப்பது அமெரிக்காவுக்கு பொருளாதார ரீதியான அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடந்த காலங்களில் உறவு மோசமடைந்திருந்தது உண்மைதான். ஆனால், நான் அதிகாரத்திற்கு வந்தால், இந்த மோதல் போக்கு முடிவுக்கு வரும் என்றும், இந்தியாவுடனான நட்பை இயல்பு நிலைக்கு திருப்புவேன் எனவும் கர்னி கூறியிருந்தார். இப்போது அதிகாரத்திற்கு வந்த பின்னர் அமெரிக்காவுக்கு மாற்றாக பல நாடுகள் இருப்பதாக பேசியிருக்கிறார்.
இதையெல்லாம் பார்க்கும்போது அமெரிக்காவை கழற்றிவிட்டுவிட்டு, இந்தியா போன்ற ஆசிய நாடுகளுடன் நட்புறவை தீவிரப்படுத்த கர்னி முயற்சிப்பார் என்று சொல்லப்படுகிறது. எது எப்படி இருப்பினும் கனடாவின் பதிலடி அமெரிக்காவை பாதிக்கத்தான் செய்யும். அதேபோல கனடாவுடனான வர்த்தகத்தை அதிகரிக்க நமக்கு வாய்ப்பு கிடைத்தால் அதை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications