கூடுதல் வரி விஷயத்தில் தயக்கம் காட்டும் டிரம்ப்! ஸ்மார்ட்டாக காய் நகர்த்தும் சீனா!
வாஷிங்டன்: சீனா மீது அமெரிக்கா தொடர்ந்து அதிக வரியை விதித்து வருகிறது. இது ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கூடுதல் வரி விஷயத்தில் டிரம்ப் தயக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிரம்ப்பின் தயக்கத்திற்கு சீனாவின் ஸ்மார்ட்டான நகர்வுதான் காரணம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவின் வரி விதிப்பு
சீனா மீது 245% வரியை அமெரிக்கா விதித்திருக்கிறது. அதாவது சீனாவிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு இந்த வரி பொருந்தும். உதாரணத்திற்கு சீன நூடுல்ஸ் சாதாரணமாக 10 டாலருக்கு அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்டு வந்தது என்று வைத்துக்கொள்வோம். தற்போது இதன் விலை 34.5 டாலராக உயர்ந்திருக்கிறது. இப்படி எல்லா பொருட்களின் விலையும் உயர்ந்திருப்பதால் சீன நிறுவனங்கள் கடும் நஷ்டமடைந்திருக்கின்றன.
டிரம்ப்பின் பேட்டி
இந்நிலையில், இந்த வரி தொடர்பாக டிரம்ப் பேசியிருக்கும் விஷயம் கவனம் பெற்றிருக்கிறது. "எங்களுக்கு வரியை தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் ஒற்றுமை இல்லை. இதே நிலைமை நீடித்தால் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் முடிவுக்கு வந்துவிடும். இந்த நிலைமையை மாற்ற வேண்டும் என்று சீன அதிகாரிகள் தொடர்ந்து முயன்று வருகின்றனர். இப்படியாவது பிரச்சனையை தீர்க்க பேச்சுவார்த்தையை தொடங்குங்கள் என கேட்டுக்கொண்டேன்.
சீனாவுடன் பேச்சுவார்த்தை
சீன அதிபருடன் நல்ல உறவு இருக்கிறது என்று நம்புகிறேன். அவர்களே இந்த பிரச்சனையை தீர்க்க பல முறை எங்களை அணுகியுள்ளனர்" என்று கூறியுள்ளார். சீன அதிபர் நேரடியாக அணுகினாரா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்க மறுத்த டிரம்ப், "வரி பிரச்சனை முடிவுக்கு வர வேண்டும்" என்று பதிலளித்திருக்கிறார்.
சீனாவின் செக்
டிரம்ப்பின் இந்த பேட்டி, சீனாவுக்கு மேலும் வரி போடுவதில் அவருக்கு இருக்கும் தயக்கத்தை காட்டுவதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். காரணம் உலக உற்பத்தியில் அமெரிக்காவை காட்டிலும் சீனா முன்னாடி இருக்கிறது. அமெரிக்க கடன் பத்திரங்களை ஏராளமான அளவில் சீனாதான் வாங்கி குவித்து வைத்திருக்கிறது. இந்த பத்திரங்களுக்கான தொகையை சீனா கேட்டால் அமெரிக்கா திவாலாகி விடும்.
பயம் காட்டும் கடன் பத்திரங்கள்
மட்டுமல்லாது அமெரிக்கா தொடர்ந்து கடன் பத்திரங்களை விற்று வருகிறது. இதை சீனாதான் வாங்கி வருகிறது. திடீரென இந்த பத்திரங்களை நாங்கள் வாங்க மாட்டோம் என்று சீனா கை விரித்துவிட்டாலும், அமெரிக்கா திவாலாகிவிடும். இப்படி புலி வாலை பிடித்த கதையாக டிரம்ப் மிரண்டு போய் இருக்கிறார். ஆகவேதான் வரி விளையாட்டை கையில் எடுத்திருக்கிறார். மேலும் மேலும் வரியை தீவிரப்படுத்துவது அமெரிக்காவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் டிரம்ப் தற்போது தயக்கம் காட்டுகிறார் என்று அவர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவுக்கும் சிக்கல்
சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான மோதல் வெறுமென இந்த இரண்டு நாடுகளை மட்டும் பாதிக்கவில்லை மூன்றாம் நாடுகளையும் கடுமையாக பாதித்திருக்கிறது. குறிப்பாக இந்தியாவின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இந்த வரியால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவின் வரி காரணமாக சீன தயாரிப்புகள் இந்திய மார்க்கெட்டை குறி வைத்திருக்கிறது. இங்கு நம்மூர் தொழில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகளை சீன பொருட்கள் காலி செய்யும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
சீனாவில் உற்பத்தியாகும் பொருட்கள் இந்திய சந்தையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும். இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
1. சீன அரசின் உதவி
2. தயாரிப்பில் உள்ள ஒழுங்குமுறை
சீன தயாரிப்புகள்
அதாவது சீனா தனது தயாரிப்புகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க அரசு தரப்பில் உதவி செய்கிறது. உதாரணத்திற்கு ஏற்றுமதிக்கான வரி விலக்கு, மூலப்பொருட்களுக்கு மானியம் போன்றவை சீன தயாரிப்புகளை எளிதாக சர்வதேச அளவில் கொண்டு சேர்க்கின்றன. இந்தியாவிலும் இப்படி சில உதவிகள் எம்எஸ்எம்இ எனப்படும் சிறு குறு மற்றும் நடுத்த தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டாலும், அது சீனா அளவுக்கு கிடையாது என்பதே நிஜம்.
இந்தியாவின் உற்பத்தி
இரண்டாவது விஷயத்தை எடுத்துக்கொண்டால் சீனாவில் அற்புதமான அளவில் தயாரிப்பு ஒழுங்குமுறை இருக்கிறது. உதாரணத்திற்கு ஆப்பிள் ஐ போன்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்படுவதில்லை. மாறாக சீனாவில்தான் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. காரணம் சீனாவில் தொழில்நுட்பம் அறிந்த திறமையான பணியாளர்கள் அதிகமானோர் இருக்கின்றனர். எனவே ஐபோனுக்கு தேவையான உதிரி பாகங்களை ஒருங்கிணைப்பது எளிது. இப்படி ஒவ்வொரு பொருளையும் உற்பத்தி செய்ய சீனாவில் ஆட்கள் இருக்கின்றனர்.
சிக்கலில் எம்எஸ்எம்இ
எனவே சீனாவில் எளிதில் சிக்கலான தொழில்நுட்பம் கொண்ட பொருட்களையும் உருவாக்கிவிட முடியும். எனவே விலையும் குறைவாக இருக்கிறது. இப்படியான பொருட்கள்தான் இந்திய எம்எஸ்எம்இ துறையை காலி செய்கிறது. என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications