டொனால்ட் ட்ரம்ப் நடத்திய தாஜ் மஹால் சூதாட்ட விடுதியில் தொழிலாளர்கள் ஸ்டிரைக்!
அட்லாண்ட்டிக் சிட்டி: அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் முன்னர் நடத்திய தாஜ் மஹால் சூதாட்ட கேளிக்கை விடுதியில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
அட்லாண்ட்டிக் சிட்டியில் தாஜ் மஹால் சூதாட்ட கேளிக்கை விடுதியை தொடங்கி நடத்தியவர் டொனால்ட் ட்ரம்ப். ஆனால் தாம் திவாலாகிவிட்டதாக கூறி இந்த விடுதியை ட்ரம்ப் எண்டர்டெயின்மெண்ட் ரிசார்ட்ஸ் என்ற நிறுவனத்திடம் திருப்பி ஒப்படைத்துவிட்டார் டொனால்ட் ட்ரம்ப்.

கடந்த 2009-ம் ஆண்டுக்குப் பின்னர் டொனால்ட் டரம்ப்க்கும் தாஜ் மஹால் சூதாட்ட விடுதிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதனிடையே தங்களது ஓய்வூதியம், இன்சூரன்ஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தாஜ் மஹால் சூதாட்ட கேளிக்கை விடுதி தொழிலாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.
ஆனால் தமக்கு நெருக்கடி கொடுத்தால் விடுதியையே இழுத்து மூடிவிடுவேன் என தாம் மஹால் சூதாட்ட விடுதியின் தற்போதைய உரிமையாளர் ஐசான் மிரட்டி வருகிறார். இதில் ஐசானுக்கும் தொழிற்சங்க தலைவர்களுக்கும் இடையே கடுமையான மோதல்கள் வெடித்துள்ளன. இதனால் தாஜ் மஹால் சூதாட்ட விடுதியின் தொழிலாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

கடந்த 2004-ம் ஆண்டு இதேபோன்ற வேலை நிறுத்தப் போராட்டம் 34 நாட்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications