ஜப்பானில் ஷாக்.! மாடர்னா வேக்சினில் உலோக துகள்கள்.. தடுப்பூசி போட்டுக்கொண்ட இருவர் அடுத்தடுத்து பலி
டோக்கியோ: ஜப்பான் நாட்டில் மாடர்னா தடுப்பூசி குப்பிகளில் உலோக துகள்கள் கலந்திருப்பதாகப் புகார் எழுந்த நிலையில், மாடர்னா தடுப்பூசி எடுத்துக் கொண்ட இரண்டு பேர் அந்நாட்டில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகில் தற்போதைய சூழலில் வேக்சின் பணிகள் மட்டுமே கொரோனாவை தடுக்க ஒரே ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. அனைத்து நாடுகளும் வேக்சின் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
சர்வதேச நாடுகளில் அமெரிக்க நிறுவனங்களான பைசர் மற்றும் மாடர்னா வேக்சின்களே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இவை இரண்டும் அதிக செயல்திறனைக் கொண்டிருப்பதால் வல்லரசு நாடுகள் மாடர்னா வேக்சினை பயன்படுத்தவே விருப்பம் காட்டுகின்றன.

ஜப்பான்
கொரோனா பாதிப்பைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தி நாடுகளில் ஒன்றாக ஜப்பான் இருந்தது. இருப்பினும், ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியதில் இருந்தே அங்கு வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையிலும், வைரஸ் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதையடுத்து அங்கு வேக்சின் போடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜப்பானில் மாடர்னா வேக்சின் மூலமே தடுப்பூசி பணிகள் நடைபெற்று வருகிறது.

இருவர் உயிரிழப்பு
இந்நிலையில், அங்கு மாடர்னா வேக்சின் போட்டுக் கொண்ட இருவர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் 30 வயதானவர்கள் என்றும் மாடர்னா தடுப்பூசியின் 2ஆவது டோஸை எடுத்துக் கொண்ட சில நாட்களில் அவர்கள் உயிரிழந்துள்ளனர். வேக்சின் போட்டுக் கொண்ட பிறகு சில நாட்களுக்கு அவர்களுக்குக் காய்ச்சல் இருந்ததாகவும் அதன் பிறகு இருவரும் உயிரிழந்துள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

உலோக துகள்கள்
முன்னதாக, ஜப்பான் நாட்டிற்கு ஸ்பெயினில் இருந்து அனுப்பப்பட்ட மூன்று பேட்ஜ் மாடர்னா வேக்சின்களில் ஒன்றில் இருந்த சில வேக்சின் குப்பிகளில் உலோக துகள்கள் கலந்திருப்பதாகப் புகார் எழுந்தது. இதனால் வேக்சின் பணிகளுக்கு இந்த 3 பேட்ஜகளில் இருக்கும் தடுப்பூசிகளைப் பயன்படுத்தக் கடந்த வியாழக்கிழமை ஜப்பான் அரச தடை விதித்திருந்தது. இருப்பினும், இந்த உத்தரவு குறித்த அறிவிப்பு வெளியாகும் முன்னரே சிலருக்கு வேக்சின் போடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

விசாரணை
இந்த 3 பேட்ஜ்களில் ஒன்றிலிருந்து வேக்சின் போட்டுக் கொண்ட இருவர் தான் இப்போது உயிரிழந்துள்ளனர், இதை ஜப்பான் அரசும் உறுதி செய்துள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என ஜப்பான் அரசும் மாடர்னா நிறுவனமும் அறிவித்துள்ளது. அதேநேரம் அவர்கள் இருவரும் உயிரிழந்ததற்கு மாடர்னா வேக்சின் தான் காரணம் என இப்போது உறுதியாகக் கூற முடியாது என்றும் ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications