கைவிரித்த மேற்கத்திய நாடுகள்.. ஷேக் ஹசீனாவுக்கு இந்த நாடுதான் ஒரே வாய்ப்பு?

Subscribe to Oneindia Tamil

டாக்கா: வங்கதேசத்தில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து, வங்கதேச பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா தனி ஹெலிகாப்டரில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவுக்கு வந்தடைந்துள்ளார். இந்நிலையில், மேற்கத்திய நாடுகள் இவரை ஏற்கத் தயாராக இல்லாததால், ஐக்கிய அரபு அமீரகம்தான் இவருக்கு தஞ்சமடைய ஒரே வாய்ப்பாக அமையும் என்றும், அதுவரை இந்தியாவில் சிறிது காலம் தங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திரப் போரில் பங்கேற்று உயிரைத் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை அமலில் இருந்தது. கடந்த 2018 இல் மாணவர்களின் போராட்டம் காரணமாக இந்த முறை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், 30 சதவீத இடஒதுக்கீடு முறை மீண்டும் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். இது பாரபட்சமான செயல் என்று கூறி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இப்போராட்டம் மாணவர்கள் மற்றும் போலீசாரிடையேயான வன்முறையாக மாறியதில் சுமார் 200 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இதையடுத்து, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ராணுவத்தினர் களமிறக்கப்பட்டனர்.

Bangladesh

இதைத்தொடர்ந்து, இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாகக் குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இயல்புநிலை திரும்பத் தொடங்கிய நிலையில், இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தில் பலர் கொல்லப்பட்டதைக் கண்டித்து மீண்டும் போராட்டம் நேற்று முன்தினம் வெடித்தது. போராட்டம் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்டட நிலையில், போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து, பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டைவிட்டு திங்கள்கிழமை வெளியேறினார். இதையடுத்து, அங்கு ராணுவ ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.

அவசர அவசரமாக நாட்டைவிட்டு புறப்பட்ட ஷேக் ஹசீனா இந்தியா நோக்கி வருகை தந்தார். திரிபுராவின் அகர்தலாவில் இருந்து ஷேக் ஹசீனா லண்டன் செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகின. ஆனால், அவர் இங்கிலாந்துக்கு பயணிக்கும் திட்டங்களில் தடை ஏற்பட்டுள்ளது. ஷேக் ஹசீனாவின் ஜனநாயக விரோத ஆட்சியின் காரணமாக இங்கிலாந்தைப் போல பின்லாந்து மற்றும் அமெரிக்காவும் ஷேக் ஹசீனா அவர்களது நாடுகளில் தஞ்சமடைவதற்கு ஆர்வம் காட்டவில்லை. இதனிடையே, அவர் சவுதி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாதுகாப்பாக இருக்கும் என்று ஷேக் ஹசீனா எண்ணினார். ஆனால், அதுகுறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் இதுவரை இல்லை.

இந்நிலையில், பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலாளர் டேவிட் லம்மி வெளியிட்ட அறிக்கையில் பிரிட்டிஷின் நிலைப்பாடு அதில் தெளிவாக இருந்தது. ஆனால், அதில், ஷேக் ஹசீனாவுக்கு புகலிடம் வழங்குவது அல்லது அதுதொடர்பாக பரிசீலிப்பது குறித்து இங்கிலாந்து சார்பில் எதுவும் குறிப்பிடவில்லை. எனவே, ஷேக் ஹசீனாவுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து புதுதில்லியில் திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் இவர் இந்தியாவில் தங்குவதே அவருக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. எனவே, மற்ற நாடுகள் கிரீன் சிக்னல் காட்டும் வரை ஷேக் ஹசீனா இந்தியாவிலேயே தங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1975 இல் ஷேக் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிப், அவரது தாயார், 10 வயதேயான ரஸ்ஸல் மற்றும் இளம் சகோதரர்கள் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர். அந்த நேரத்தில், ஷேக் ஹசீனா ஜெர்மனியில் இருந்ததால் தனது சகோதரி ஷேக் ரெஹானாவுடன் தப்பி அவர் இந்தியாவுக்கு வந்தார். இந்திய அரசு அவருக்கு தங்குமிடம் அளித்து, பாதுகாத்து வந்தது. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் அவரது குடும்பத்தினர் அவரை கவனித்துக் கொண்டனர். அதேபோல, இந்த முறையும் ஷேக் ஹசீனா விரும்பும் வரை அவரை இந்தியாவில் தங்கவைக்கவும், பாதுகாப்பு அளிக்கவும் அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+