லண்டனில் மினி பேருந்தை நசுக்கிய கண்டெய்னர் லாரி... 6 தமிழர்கள் உள்பட 8 பேர் பலி
லண்டனில் நிகழ்ந்த சாலை விபத்தில் 8 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 6 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
லண்டன்: லண்டனில் மினி பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 6 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள், இருவர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் 3 பேர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்கள் என்றும், மூவர் கும்பகோணத்தை சேர்ந்தவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம், பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மகன் மனோரஞ்சிதம் லண்டனில் பணியாற்றி வருகிறார். அவரை பார்ப்பதற்காக பன்னீர்செல்வமும், அவருடைய மனைவி வள்ளி, தங்கை தமிழ்மணி உட்பட 4 பேர் லண்டன் சென்றனர்.

அங்கிருந்து சுற்றுலா தலத்திற்கு செல்வதற்காக மினி பேருந்தில் பயணம் செய்தனர். அப்போது ஏற்பட்ட சாலை விபத்தில் பன்னீர்செல்வம், வள்ளி, தமிழ்மணி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மொத்தம் 10க்கும் மேற்பட்டவர்கள் அந்த மினி பேருந்தில் பயணம் செய்தனர். இதில் காஞ்சிபுரம் மற்றும் கும்பகோணத்தைச் சேர்ந்தவர்களும் பயணம் செய்திருக்கிறார்கள். இதில் கும்பகோணத்தைச் சேர்ந்த 3 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மினி பேருந்தை ஓட்டிய கேரளாவை சேர்ந்த இளைஞரும் உயிரிழந்தார். விபத்தை அடுத்து, காயமடைந்த 4 பேரை மீட்டு, பர்மிங்ஹாமில் உள்ள மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியாவிற்கு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக இன்று மாவட்ட ஆட்சியரை சந்திக்க உள்ளனர்.

இந்த விபத்தை தொடர்ந்து 2 கன்டெய்னர் லாரிகளின் ஓட்டுநர்களை லண்டன் போலீஸார் கைது செய்தனர். இதில், ஒருவர் மதுபோதையில் கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்ததே விபத்திற்கு காரணம், என முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருவதாக, லண்டனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளன
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications