மாடல் அழகியை கடத்தி ஆன்லைனில் ரூ. 1.9 கோடிக்கு செக்ஸ் அடிமையாக விற்ற நபர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்தை சேர்ந்த மாடல் அழகி ஆன்லைனில் செக்ஸ் அடிமையாக விற்க கடத்தப்பட்டார்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கூல்ஸ்டன் பகுதியை சேர்ந்தவர் க்ளோ அய்லிங்(20). மாடல் அழகி. அவர் கடந்த மாதம் போட்டோஷூட்டில் கலந்து கொள்ள இத்தாலியின் மிலன் நகருக்கு சென்றார்.

UK model kidnapped to auction online as a sex slave

அப்போது ஒருவர் அவருக்கு மயக்க மருந்து அளித்து ஒரு வீட்டில் ஆறு நாட்களாக அடைத்து வைத்துள்ளார். க்ளோவை ஆன்லைனில் செக்ஸ் அடிமையாக அறிவித்து ஏலம் விட்டுள்ளார். க்ளோவை ரூ. 1 கோடியே 91 லட்சத்திற்கு ஏலம் விட்டுள்ளார்.

க்ளோ மயக்கம் தெளிந்தபோது அவர் கை, கால்கள் கட்டப்பட்டு ஒரு பையில் காரின் டிக்கியில் இருந்தார். பின்னர் க்ளோ ஒரு குழந்தைக்கு தாய் என்பது தெரிந்த பிறகு அவரை விடுவித்துவிட்டனர்.

இது குறித்து க்ளோ கூறியதாவது,

Arvakurichi election will be a roll model: Election commission - Oneindia Tamil

இந்த சம்பவத்தை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். உயிரோடு வீடு திரும்புவேன் என்ற நம்பிக்கை இல்லாமல் இருந்தது. என்னை மீட்ட இத்தாலி மற்றும் இங்கிலாந்து அதிகாரிகளுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chloe Ayling, a 20-year-old UK model was kidnapped in Milan to auction her online as a sex slave.
Please Wait while comments are loading...