என்ன நடக்கிறது? இந்தியர்களை சிறைபிடித்த உக்ரைன் ராணுவம்? ரஷ்யா பரபர குற்றச்சாட்டு.. இந்தியா விளக்கம்
மாஸ்கோ: உக்ரைனில் இந்திய மாணவர்கள் சிறை பிடிக்கப்பட்டு இருப்பதாக ரஷ்யா குற்றஞ்சாட்டி உள்ளது. உக்ரைன் ராணுவம் மீது ரஷ்யா இந்த குற்றச்சாட்டை வைத்துள்ள நிலையில் இந்திய வெளியுறவுத்துறை இதை மறுத்துள்ளது.
Recommended Video
உக்ரைனில் போர் தீவிரம் அடைந்து உள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய படைகள் போர் அறிவித்து இன்றோடு சரியாக ஒரு வாரம் ஆகிறது. 7 நாள் போரில் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது.
ரஷ்யா தரப்பில் 6 ஆயிரம் ராணுவ வீரர்கள் பலியாகிவிட்டதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் தலைநகர் கீவிற்கு வெளியே 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு பீரங்கிகள் வரிசையாக நிற்கின்றன. உக்ரைனில் உள்ள கார்கிவ் பகுதியில் போர் தீவிரமாக நடந்து வருகிறது.

கார்கிவ்
கார்கிவ் என்பது உக்ரைனில் இருக்கும் பெரிய நகரங்களில் ஒன்று ஆகும். இது ரஷ்யாவின் எல்லை பகுதியில் உள்ளது. இங்குதான் ரஷ்யா கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரைனில் கார்கிவ் பகுதியில் இந்தியர்கள் பலர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தலைநகர் கீவில் இருக்கும் இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுவிட்டனர். அதே போல் அங்கு இருந்த இந்திய தூதரகம் மூடப்பட்டு லெவிவ் நகரத்திற்கு மாற்றப்படுகிறது.

மோசமான போர்
இதையடுத்து நேற்று கார்கிவ் பகுதியில் இருந்து இந்தியர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டது. அங்கு மோசமான தாக்குதல்கள் நடக்க போகின்றன. உடனே வெளியேறுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டது. அதோடு நடந்தாவது வெளியேறுங்கள் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து இந்தியர்கள் அங்கிருந்து வேகமாக வெளியேற முயன்றனர். ஆனால் உக்ரைன் மக்கள், ராணுவ வீரர்கள் இந்தியர்களை சிறை பிடித்ததாக ரஷ்யா குற்றஞ்சாட்டி உள்ளது. இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு துறை குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளது.

சிறை பிடிப்பு
கார்கிவ் பகுதியில் இந்தியர்களை உக்ரைன் ராணுவம் சிறை பிடித்துள்ளது. அவர்களை வலுக்கட்டாயமாக உக்ரைன் ராணுவம் சிறை பிடித்து வெளியே செல்ல விடாமல் தடுத்து உள்ளது, குழுவாக மாணவர்கள் பலர் இங்கே சிறை பிடிக்கப்பட்டு இருக்கின்றனர். ரஷ்யா இவர்களை முடிந்த அளவு வெளியேற்ற முயன்று கொண்டு இருக்கிறது . ரஷ்ய படைகளின் உதவியுடன் இந்தியர்கள் பலர் இந்த பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

உக்ரைன் குற்றச்சாட்டு
இந்தியா இது தொடர்பாக எங்களுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இந்தியர்களை ரஷ்ய விமானங்கள் மூலம் எல்லைக்கு கொண்டு செல்ல முயன்று கொண்டு இருக்கிறோம் என்று ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. நேற்று இது தொடர்பாக பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புடினிடம் போனில் பேசியதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து முதல் கட்டமாக பலர் கார்கிவ் பகுதியில் இருந்து வெளியேறி உள்ளனர். ஆனால் இன்னும் பலர் அங்கு சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியா விளக்கம்
ஆனால் இந்த தகவலை இந்தியா மறுத்துள்ளது. இந்தியர்கள் உக்ரைனில் சிறைபிடிக்கப்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. உக்ரைன் அரசு அதிகாரிகளின் உதவியுடன் இந்தியர்களை மீட்டு வருகிறோம். இந்தியர்களை தொடர்ந்து போர் நடக்கும் பகுதிகளில் இருந்து வெளியே கொண்டு வந்து கொண்டு இருக்கிறோம். இந்தியர்கள் சிறை பிடிக்கப்பட்டதாக எங்களுக்கு தகவல் வரவில்லை. இதற்காக சிறப்பு ரயில் ஏற்பாடு செய்ய உக்ரைன் அரசிடம் கோரிக்கை விடுத்து இருக்கிறோம் என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

அச்சம்
அதே சமயம் உக்ரைன் தரப்பு இந்தியர்களை நாங்கள் சிறை பிடிக்கவில்லை என்று கூறி வருகிறது. உக்ரைன் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளில் கார்கிவ் பகுதியில் ரஷ்ய ராணுவம்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. அங்கு ரஷ்ய படைகள்தான் இந்தியர்களை சிறை பிடித்து உள்ளது. இந்தியர்களை நாங்கள் சிறைபிடிக்கவில்லை. இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற ஏற்கனவே அதிபர் செலன்ஸ்கி உறுதி அளித்துள்ளார் என்று அந்நாடு வெளியுறவுத்துறை கூறி இருக்கிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications