ஆரம்பித்த ரஷ்யா! சீறி கிளம்பிய குண்டுகள்! உக்ரைன் எல்லையில் 5 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டதால் பதற்றம்
மாஸ்கோ: உக்ரைனிலிருந்து ரஷ்யாவிற்குள் நுழைய முயன்ற 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம் என உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்திருந்தன. இதனால் சர்வதேச அளவில் பதற்றமான சூழல் உருவாகி இருக்கிறது.
உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ நாடுகள் களத்தில் இறங்கியது. ரஷ்யாவுக்கு ஆதரவாக சீனாவும் களத்தில் இறங்கியது. இதனால் ஐரோப்பாவுக்கு ஆபத்து என்ற
அறிவித்தது அமெரிக்கா.

எல்லை
கடந்த சில வாரங்களாகவே உக்ரைன் எல்லையில் ரஷ்யா தொடர்ந்து தனது ராணுவத்தைக் குவித்து வருகிறது. மேலும், அதிநவீன ஆயுதங்களையும் ரஷ்யா அனுப்பி வருகிறது. உக்ரைன் எல்லையில் சுமார் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை ரஷ்யா குவித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, 80 ஆயிரம் வீரர்கள் அங்கிருந்த நிலையில், இப்போது வீரர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.

அணு ஆயுத பயிற்சி
சமீபத்தில் ரஷ்ய அதிபர் புதின் தலைமையில் அணு ஆயுத பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த போர் பதற்றத்தை தவிர்க்க பல நாட்டுத் தலைவர்கள் ஈடுபட்டுவருகிறார்கள். எந்த விவகாரத்தையும் பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க விரும்புவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ஆனால் ரஷ்யா இது எதற்குமே சரியான பதிலளிக்காமல் இருந்துவந்தது.

துப்பாக்கிச்சூடு
உக்ரைனிலிருந்து ரஷ்யாவிற்குள் நுழைய முயன்ற 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் எல்லையில் ரஷ்யா துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது அம்பலமாகியுள்ளது. ரஷ்ய துப்பாக்கிச் சூட்டில் பலியானது உக்ரைன் ராணுவ வீரர்களா என்ற யூகங்கள் கிளம்பியுள்ளன. உக்ரைனின் புரட்சி படையினரை ரஷ்யா சுட்டதா அல்லது உக்ரைன் ராணுவ வீரர்களை சுட்டதா என்பது தெரியவில்லை. ஒருவேளை உக்ரைன் ராணுவ வீரர்கள் சுடப்பட்டிருந்தால் பெரும் போர் பதற்றம் வெடிக்கும் வாய்ப்புள்ளது. போருக்கே இது இட்டுச் செல்லவும் வாய்ப்புள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மிகப்பெரிய அளவில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.

ராணுவம்
துப்பாக்கிச்சூட்டுக்கு இதுவரை உக்ரைன் தரப்பு எந்த விளக்கமும் இதுவரை கொடுக்கவில்லை. டாங்கிகள், பீரங்கிகள் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்களை எல்லைக்கு அருகே முன் களத்திற்கு அனுப்பியுள்ளது ரஷ்யா.உக்ரைன் எல்லைக்கு வடக்கே சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரஷ்ய நகரமான வாலுய்கிலும் ரஷ்யா அதிகப்படியான ராணுவத்தைக் குவித்துள்ளது சாட்டிலைட் படங்களில் தெளிவாகத் தெரிகிறது.
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications