குடியிருப்புகளில் குண்டு போட்ட ரஷ்யா.. உக்ரைனில் 7 அப்பாவிகள் பரிதாப பலி
கிவ்: ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனை சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டதாகவும் 9 பேர் காயமடைந்ததாகவும் உக்ரைன் அரசு தகவல் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை எடுக்குமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டதன் பேரில் இன்று அதிகாலை முதல் ரஷ்ய படைகள் உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள்.
உக்ரைனின் விமான தளங்கள், ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால் தங்கள் நாட்டை சேர்ந்த நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் உயிரிழந்துவிட்டதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

உக்ரைன் குடியிருப்பில் தாக்குதல்
உக்ரைனில் உள்ள ராணுவ தளங்கள் மற்றும் விமான தளங்கள் ஆகியவற்றின் மீது மட்டுமே ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதாக விளக்கம் அளித்தது. ஆனால் தற்போது உக்ரைனில் குடியிருப்பு பகுதிகளில் ரஷ்யா குண்டு மழை பொழிந்ததால் அப்பாவி மக்கள் 7 பேர் உயிரிழந்ததாகவும் 9 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. போடில்ஸ்கில் ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஒடேஸாவில் நடந்த தாக்குதலில் 6 பேர் பலியாகிவிட்டனர். மரியூபோலில் நடந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். 19 பேரை காணவில்லை என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

2 நகரங்களை கைப்பற்றியது ரஷ்யா
உக்ரைனின் கிழக்கு பகுதியில் 2 நகரங்களை ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதாக தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸில் ராணுவ பயிற்சிகளை கொடுப்பதற்காக ரஷ்ய துருப்புகள் குவிந்துள்ளன. அதுபோல் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் கார்கிவ்வில் உள்ள ஒரு அபார்ட்மென்ட் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தியர்கள் தவிப்பு
கிவ்வில் ரஷ்ய படைகள் நுழைந்துள்ளதால் அங்குள்ள இந்திய மாணவர்கள், இந்தியர்கள் நாடு திரும்ப கிவ் விமான நிலையத்திற்கு வந்தனர். ஆனால் கிவ்வை சுற்றியுள்ள பகுதிகளில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான பேர் விமான நிலையத்தில் சிக்கி தவித்து வருகிறார்கள்.
Recommended Video

5 ரஷ்ய விமானங்கள்
உக்ரைன் அரசு 5 ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்தியது. உக்ரைன் கிழக்கு பகுதியில் வெடி பொருட்களின் சப்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே வருகிறது. ரஷ்யாவும் விடாமல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி கொண்டே இருக்கிறது. இந்த போரை நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications