ரஷ்ய அதிபரே.. மனிதாபிமான அடிப்படையில் படைகளைத் திரும்ப பெறுங்கள் - ஐநா பொதுச்செயலாளர் வேதனை
ஜெனீவா: ரஷ்யா -உக்ரைன் போர் பேரழிவை ஏற்படுத்தும். இதனால் ரஷ்யா படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்ரேஸ் தெரிவித்துள்ளார்.
சோவியத் யூனியனில் இருந்து வெளியேறி, உக்ரைன் தனி நாடாக உருவானது. அதையடுத்து நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பில் இணைய விரும்பியது உக்ரைன்.
இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனில் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. இதனால் ரஷ்ய ஆதரவு பெற்ற அதிபர் விக்டர் யானுகோவிச் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.

உக்ரைன் - ரஷ்யா
இருநாடுகளுக்கும் இடையே கடுமையான போர் சூழல், கடந்த சில ஆண்டுகளாகவே நிலவியது. இரு நாடுகளும் தங்கள் எல்லையில் லட்சக்கணக்கான ராணுவ வீரர்களை நிற்கவைத்தன. இதனால் போர் சூழல் உருவாகும் என்று உலக நாடுகள் பயந்து, ரஷ்யாவை எச்சரித்தன. ஆனால் ரஷ்யா எதையும் காதில் வாங்காமல், அணு ஆயுத பயிற்சியை அதிபர் புதின் தலைமையின் பயிற்சி செய்தது.

போர்
இந்நிலையில் இன்று காலை 8.30 மணிக்கு உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டது. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ரஷ்ய படைகளுக்கு அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, தற்போது அந்த நாட்டு படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்குவதாக கூறப்படுகிறது. இரு நாடுகளும் எதிரிகளின் விமானங்களை சுட்டு வீழ்த்தி வருகின்றன.

ஐநா
ரஷ்யாவுக்கு சீனா ஆதரவளித்ததும், இது ஐரோப்பாவுக்கு எதிராக முடியும் என அமெரிக்கா களத்தில் இறங்கியது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என அழைத்தது. உக்ரைன் தயாராக இருந்தாலும், ரஷ்யா ஏற்றுக்கொள்ளவில்லை. போர் தொடங்கி இருக்கும் சூழலில் ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்ரேஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
Recommended Video

பாதுகாப்பு கவுன்சில்
உக்ரைன் பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்ரேஸ், ''போரின் விளைவுகள் உக்ரைனுக்குப் பேரழிவை ஏற்படுத்தும். உலகப் பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்கும். ரஷ்ய அதிபரே மனிதாபிமான அடிப்படையில் உங்களது படைகளைத் திரும்ப பெறுங்கள்'' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications