ஈரான் வானில் ’இரும்பு ராட்சசன்கள்’.. ட்ரம்ப் அதிரடியால் பரபரப்பான உலகம்! திருப்பி அடிப்பாரா கமேனி?
நியூயார்க்: ஹமாஸ் - இஸ்ரேல் இடையேயிலான போர், ஈரான் இஸ்ரேல் இடையேயான போராக மாறியது. இந்த நிலையில் அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்கள் ஈரான் மீது தாக்குதல் நடத்தி இருக்கும் நிலையில் உலக அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா தங்களை தாக்கினால் பதிலடி கொடுப்போம் என ஈரான் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில், அமெரிக்க நகரங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சர்வதேச அளவில் போர்ச்சூழல் எழுந்துள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக இஸ்ரேல், காசா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பிடையே தொடர் மோதல் நீடித்து வருகிறது 2023 ஆம் ஆண்டு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் ஆயிரம் பேர் கொல்லப்பட்ட நிலையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் போர் தொடுத்தது.
அதற்கு பிறகு, ஹமாஸ் இஸ்ரேல் இடையே கடுமையான மோதல் தொடர்ந்து வந்த நிலையில் பழைய கைதிகளை ஒப்படைப்பது என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

2023 அக்டோபரில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டு வந்த நிலையில், போர் நிறுத்தம் உலக நாடுகளிடையே ஒருவித நிம்மதியை ஏற்படுத்தியது. ஆனால் பணய கைதிகளை ஒப்படைக்கவில்லை என கூறி ஹமாஸ் மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் காசாவில் இஸ்ரேலிய படைகள் நடத்திய தீவிர தாக்குதலில் சுமார் ஆயிரக்கணக்கானோர் உயரிழந்திருக்கிறார்கள். அதில் பெரும்பாலான குழந்தைகள் வயதானவர்கள் மற்றும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இஸ்ரேல் தனது பார்வையை ஈரான் பக்கம் திருப்பி இருக்கிறது. திடீரென கடந்த வாரம் ஈரானின் ராணுவ தளம், அணு ஆயுத தயாரிப்புக்கு பயன்படும் யுரேனியத்தை செறிவூட்டும் மையம் ஆகியவற்றை குறி வைத்து வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் பலத்த சேதத்தை சந்தித்ததோடு ஈரானின் முக்கியமான ராணுவ தளபதிகள், படைப்பிரிவுகளை வழி நடத்தியவர்கள், முக்கிய விஞ்ஞானிகள் இறந்ததாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் ஆகியவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தியதில் பலர் கொல்லப்பட்டதாகவும் ஏராளமானோர் காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் ஈரான் இடையே மோதல் வலுத்துவரும் நிலையில் அமெரிக்காவும் களத்தில் குதித்துள்ளது.
ஏற்கனவே அமெரிக்கர்கள், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்ட நிலையில் ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய மூன்று அணு உலைகள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும், ஈரான் வான்வெளிக்கு வெளியே அனைத்து விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், பர்தாவின் முக்கிய தலங்கள் மீது முழு அளவில் வெடிகுண்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தி உள்ளோம். இதனை தொடர்ந்து விமானங்கள் அனைத்தும் பாதுகாப்பாக நாடு திரும்பிவிட்டன. நம்முடைய நாட்டின் சிறந்த போர் வீரர்களுக்கு வாழ்த்துக்கள். உலகளவில் வேறு எந்த ராணுவமும் இதுபோன்று செய்ததில்லை. இது அமைதிக்கான நேரம் ஆகும்" என பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம் ஈரானில் அமெரிக்கா முதன் முதலாக தாக்குதல் நடத்தியுள்ளது உறுதியாக இருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்க தங்களை தாக்கினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஏற்கனவே ஈரான் எச்சரித்து இருந்தது. அந்நாட்டின் உயர் தலைவரான அயத்துல்லா அலி கமேனி பதுங்கு குழிக்குள் பதுங்கி இருந்ததாக சொல்லப்பட்ட நிலையில் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்து இருந்தார்.
தற்போது சொன்னது போலவே அமெரிக்கா தாக்குதல் நடத்தி இருக்கும் நிலையில் ஈரானின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஒருவேளை அமெரிக்க நகரங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் அமெரிக்காவும் பதிலடி கொடுக்கும். மேலும் அமெரிக்காவுக்கு ஆதரவாக சில நாடுகளும் களமிறங்கும் என்பதால் உலக அளவில் போர் சூழல் மூண்டு உள்ளது.
-
39 முறை பொய் சொன்ன Trump.. முழுக்க முழுக்க மார்க்கெட் மேனிபுலேஷன்? ஈரான் கொடுத்த பதிலடி! -
விடியல் பிறக்கிறது.. ஈரான் போர் முடிவு.. டிரம்ப் உடன் ராசியான முஜ்தபா கமேனி.. இவரே சொல்லிட்டாரா? -
14 பாயின்ட்.. மொத்த போரும் முடிவுக்கு வந்தது.. கதவை திறங்க, கப்பல் கிளம்பட்டும்! -
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்! -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
ஹார்முஸில் கப்பல் போக ஆரம்பித்த அடுத்த நொடி.. ஈரான் கைகளுக்கு வரும் பல கோடி டாலர்! எப்படி? -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
யுரேனியத்தை பதுக்கும் ஈரான்.. அமெரிக்கா தொட கூட முடியாது! டிரம்புக்கு செக்! -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications