30 ஆண்டு பழக்கத்தை மாற்றிய US.. இஸ்ரேலில் திடீர் மாற்றம்! விடாமல் தொற்றிக்கொண்டிருக்கும் ஈரான் பயம்!
டெல் அவிவ்: கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்கா தனது போர் விமானங்களை இஸ்ரேலில் நிரந்தரமாக நிலை நிறுத்தியது கிடையாது. ஏனெனில் அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து அரபு நாடுகளுக்கு எதிராக போர் தொடுக்கலாம் என்கிற அச்சம் இருந்தது. இந்நிலையில், இந்த பழக்கத்தை அமெரிக்கா தற்போது மாற்றியிருக்கிறது.
அமெரிக்கா தனது மிகவும் சக்திவாய்ந்த F-22 ராப்டர் போர் விமானங்களை முதன்முறையாக இஸ்ரேலில் நிறுத்தியுள்ளது. இதன் மூலம் அமெரிக்கா, தனது ராணுவக் கொள்கையில் பெரிய மாற்றத்தை செய்திருப்பதாக அறிவித்திருக்கிறது.

ஈரான் பயம்
ஈரானுடன் அதிகரித்து வரும் பதட்டங்கள் மற்றும், வளைகுடா நாடுகளில் ராணுவத் தளங்களைப் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் காரணமாகத்தான் இஸ்ரேலில் கொண்டு போய் தனது விமானத்தை அமெரிக்கா நிறுத்தியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த F-22 விமானங்கள் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திறனை மேலும் பலப்படுத்தும். ஆனால், இந்த நடவடிக்கையால் அரபு நாடுகள் ஜர்க் ஆகியுள்ளன. காரணம் இந்த விஷயம் குறித்து அமெரிக்கா வெளிப்படையாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பதுதான்.
F-22 ஜெட் விமானங்கள் இஸ்ரேலில் வந்திறங்கும் வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகின. அமெரிக்க விமானப்படையின் F-22, வானில் ஆதிக்கம் செலுத்தி, துல்லியமாகத் தாக்கி, குண்டுவீச்சு விமானங்களுக்குப் பாதுகாப்புப் பணியை செய்யக்கூடிய மிகத் திறமையான ஒரு போர் விமானம் இது.
ஈரான் மீது தாக்குல்
டிரம்ப், ஈரானின் அணு ஆயுத மற்றும் ஏவுகணை திட்டங்கள் மீது அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இந்த போர் விமானங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் நேரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒருவேளை டிரம்ப் சொல்வதை ஈரான் கேட்கவில்லை எனில், ஈரானுக்கு எதிராக போர் தொடுக்க டிரம்ப் பிளான் போட்டு வருகிறார். இதற்கு முன்னரும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருக்கிறது.
ஆனால், கடந்த முறை போல, இந்த முறை தாக்குதல் ஏதேனும் நடத்தப்பட்டால் பழிவாங்கப்படும் என்று ஈரான் முன்னதாக எச்சரித்திருந்தது. குறிப்பாக அமெரிக்க ராணுவ தளங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்திருந்தது.
அரபு நாடுகள் அச்சம்
சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், ஈரானுக்கு எதிரான தாக்குதல்களுக்கு தங்கள் நிலப்பரப்பையோ அல்லது வான்வெளியையோ அமெரிக்க படைகள் பயன்படுத்த கூடாது என்று கறாராக சொல்லிவிட்டது. இதனால், ஜோர்டானில் உள்ள முவாஃபாக் சால்டி போன்ற ராணுவத் தளங்களில் அமெரிக்கப் போர் விமானங்கள் குவிக்கப்படுவது பிரச்சனைகளை உருவாக்கும் என்ற கவலைகளை எழுப்பியுள்ளது. இப்படி இருக்கையில் இஸ்ரேலில் தனது விமானங்களை நிலை நிறுத்தியன் மூலம், அமெரிக்காவுக்கு மாற்று வழி இருக்கிறது என்பதை டிரம்ப் தெளிவுப்படுத்தியுள்ளார்.
இஸ்ரேல் பிரச்சனை
வரலாற்று ரீதியாக, அமெரிக்க தளபதிகள் அரபு நாடுகளுடன் தொடர்ந்து நட்பில் இருக்க வேண்டும் என்பதற்காக, தேவையற்ற பிரச்சனைகளைத் தவிர்க்க இஸ்ரேலுடன் ராணுவ ஒத்துழைப்பில் இருந்து விலகி இருந்தனர். ஏனெனில் இஸ்ரேலுக்கும்-அரபு நாடுகளுக்கும் சுத்தமாக செட் ஆகாது. ஆனால், 2021-க்கு நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாற தொடங்கியது. இப்போது அமெரிக்க விமானங்கள் நேரடியாக இஸ்ரேலுக்கு வந்து இறங்கும் அளவுக்கு இந்த மாற்றம் நடந்திருக்கிறது.
-
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications