கறுப்பின இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பு- அமெரிக்காவில் மீண்டும் பெரும் வன்முறை!!
வாஷிங்டன்: அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தின் பெர்குசன் நகரில் கறுப்பின இளைஞரான மைக்கேல் பிரவுனை சுட்டுக் கொன்ற போலீஸ் அதிகாரி வில்சன் மீது விசாரணை நடத்த முடியாது என்று நீதிபதிகள் அறிவித்ததைத் தொடர்ந்து மீண்டும் அங்கு வன்முறை வெடித்துள்ளது. பல இடங்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள பெர்குசன் நகரில் கடந்த ஆகஸ்டு 9-ந் தேதி மைக் பிரவுன் என்ற கறுப்பின இளைஞரை போலீஸ் அதிகாரி டேரன் வில்சன் சுட்டுக்கொன்றார். இதனால் அப்போது அங்கு பெரும் வன்முறை வெடித்தது. கடைகள் சூறையாடப்பட்டன. பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
PHOTO: #Ferguson Walgreens set ablaze @PaulLewis pic.twitter.com/VC70vKICRZ
— Breaking911 (@Breaking911) November 25, 2014 இந்த வழக்கில் போலீஸ் அதிகாரி வில்சன் மீது மைக்கேல் பிரவுன் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை முடிவடைந்து நீதிபதிகள் தங்களது தீர்ப்பை வழங்கினர். அதில் பிரவுனை சுட்டுக்கொன்றது தொடர்பாக வில்சன் மீது விசாரணை நடத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டது.இத்தீர்ப்பு வெளியானவுடன் அங்கு திரண்டிருந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் காவல்துறையினரின் வாகனங்களை அடித்து நொறுக்கினர். போலீசார் மீது கற்களையும், பாட்டில்களையும் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதனால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து அம்மாகாணத்தில் அவசர நிலை உத்தரவை பிறப்பித்து ஆளுநர் நிக்சன் உத்தரவிட்டுள்ளார். அதே நேரத்தில் போராட்டக்காரர்களை பொறுமையாக கையாளுமாறு அதிபர் ஒபாமா காவல்துறையினரை கேட்டுக்கொண்டுள்ளார்.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications