ஏமன் மீது 2வது நாளாக தொடரும் தாக்குதல்! இந்த முறை ரேடார் அமைப்பு மீதுதான் குறி! கலக்கத்தில் செங்கடல்

Subscribe to Oneindia Tamil

சனா: இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள ஈரான், ஹவுதியுடன் கைகோர்த்து செங்கடல் பகுதியை ஆக்கிரமிக்க முயன்று வருகிறது. இந்நிலையில், ஹவுதிக்கு எதிரான தாக்குதல்களை பிரிட்டன் மற்றும் அமெரிக்கா கூட்டாக தொடங்கியுள்ளன. நேற்று தொடங்கிய இந்த தாக்குதல் இன்று இரண்டாவது நாளாக நீடித்து வருகிறது.

பாலஸ்தீனத்திற்காக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொள்வதும், அதற்கு எதிராக ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலை தொடுப்பதும் அடிக்கடி நடந்து வரும் சம்பவங்கள்தான். இந்த மோதல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் சீரியஸானது. அதாவது ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது ராக்கெட்களை ஏவி 1,400 பேரை கொல்ல, இஸ்ரேல் கண்மூடித்தனமான பதில் தாக்குதலில் இறங்கியது. இப்படி தொடர்ந்து வரும் தாக்குதல் காரணமாக காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்திருக்கிறது.

US launched attacks on Yemen for the second day today

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹமாஸூக்கு ஆதரவாக ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி படை களத்தில் இறங்கியிருக்கிறது. குறிப்பாக செங்கடலை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயன்றுக்கொண்டிருக்கிறது. இந்த வழியாக பயணிக்கும் இஸ்ரேல் ஆதரவு கப்பல்களை தாக்கி கைப்பற்றுவோம் என்று கூறியிருந்தது. இதன்படி சில கப்பல்களையும் கைப்பற்றியிருந்தது. இந்த செங்கடல் பகுதி வழியாக ஆசிய - ஐரோப்பியத்தின் 12% வர்த்தகம் நடைபெறுகிறது. எனவே இதை ஆக்கிரமிப்பது வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கும்.

இந்தியாவிலிருந்து சென்ற கப்பல்களையும் ஹவுதி படையினர் சிறைபிடிக்க முயன்றனர். இதுவரை 27 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில், ஹவுதி படையினருக்கு எதிரான கூட்டு தாக்குதல்களை அமெரிக்காவும், பிரிட்டனும் தொடங்கியுள்ளன. ஏமன் தலைநகர் சானா, சாதா மற்றும் தாமர் உள்ளிட்ட நகரங்களில் இந்த படைகள் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இது, 'அமெரிக்க-சியோனிஸ்ட்-பிரிட்டிஷ்' ஆக்கிரமிப்பு என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் மூலம் இந்த தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. 10க்கும் அதிகமாக இலக்குகளை அமெரிக்க-பிரிட்டன் கூட்ட படைகள் குறி வைத்திருக்கின்றன. செங்கடலில் பதற்றமற்ற வணிகத்தை மீட்டுக்கும் வரை இந்த தாக்குதல் தொடரும் என அமெரிக்கா கூறியிருக்கிறது. ஆனால் அமெரிக்கா இந்த தாக்குதலுக்கு, நிச்சயம் பதில் சொல்ல வேண்டும் என்றும், பதில் தாக்குதல் தொடுக்கப்படும் எனவும் ஹவுதி அமைப்பு அறிவித்திருக்கிறது.

இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் தாக்குதல் நீடித்திருக்கிறது. இன்று ஏமன் நாட்டின் ரேடார் தளத்தை குறி வைத்து குண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன. இது தவிர ட்ரோன்கள் மற்றும், ஏவுகணை கிடங்குகள் மீதும் குண்டு மழை பொழிந்திருக்கிறது. மொத்தமாக 28 இடங்களில் 60 இலக்குகள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருக்கின்றன.

இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு முன்னதாக ஐநா பாதுகாப்ப கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தது. அதாவது செங்கடல் பகுதியில் செல்லும் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நாடுகளை திருப்பி தாக்க அமெரிக்க மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு உரிமை இருக்கிறது என்பதுதான் அந்த தீர்மானம். இது நிறைவேற்றப்பட்டதையடுத்துதான் தாக்குதல்கள் தொடங்கியுள்ளன.

இதற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், இதற்காக ஐநா பாதுகாப்பு கவுன்சில கூட்டப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+