"உர்"ருன்னு முறைச்சுப் பார்த்த நாயை வெட்டிக் கூறு போட்ட கோபக்கார இளைஞர்!
வெஸ்ட் பாம் பீச், புளோரிடா: அமெரிக்காவின் வெஸ்ட் பாம் பீச் பகுதியைச் சேர்ந்த ஜேவியர் ஓரெல்லி என்ற 28 வயது இளைஞரை, நாயை வெட்டிக் கொன்ற குற்றத்திற்காக போலீஸார் கைது செய்துள்ளனர். அந்த நாய் தன்னை வினோதமாக முறைத்துப் பார்த்ததால் வெட்டிக் கொன்றதாக ஜேவியர் கூறியுள்ளார்.
அந்த நபர் மீது 2 பிரி்வுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

சம்பவத்தன்று போலீஸாருக்கு ஒரு தொலைபேசித் தகவல் வந்தது. அதில் பேசிய நபர், ஒரு இளைஞர் தனது நாயை கொடூரமாக தாக்கிக் கொண்டிருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்தனர்.
அவர்கள் போய்ப் பார்த்தபோது அந்த வீட்டின் தோட்டத்தில் ஒரு பெரிய கருப்பு நிற வாய் துண்டாக வெட்டப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்ததைக் கண்டனர். ஒரு சவழக்குழி தோண்டப்பட்டிருந்தது.
உடல் தனியாக கிடந்தது. துண்டிக்கப்பட்ட தலையை பெரிய கல்லுக்கு மேலே அந்த நபர் வைத்திருந்தார். அருகே பெரிய கத்திகள் இரண்டு கிடந்தன.
மேலும் தலைக்கு அருகே அந்த நாயின் உரிக்கப்பட்ட தோலையும் அந்த நபர் போட்டு வைத்திருந்தார். நாயை பலமாக அடித்த மரக் கட்டையும் அந்த இடத்திலேயே கிடந்தது.
அந்த நபரிடம் போலீஸார் விசாரித்தபோது நாய் என்னையே முறைத்துக் கொண்டிருந்தது. விநோதமாக பார்த்தது. மேலும் அது என்னைக் கடிக்கவும் முயற்சித்தது. இதனால்தான் கோபமடைந்து தாக்கினேன் என்றார்.
நாயை சரமாரியாக அடித்துக் கொலை செய்த ஜேவியர் அதன் பின்னர் தலையை பெரிய கத்தியை எடுத்து வந்து வெட்டி துண்டித்துள்ளார். செத்துக் கிடந்த நாய்க்கு அருகிலேயே இறந்த நிலையில் ஒரு வாத்தும் கிடந்தது. அதையும் ஜேவியரே கொன்றதாக கூறினாராம்.
அந்த ஊரில் பீட்டாக்காரங்க இல்லையோ?
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications