ஒத்துவராத உக்ரைன்.. ஓரம் கட்டிய டிரம்ப்! ஜெலன்ஸ்கிக்கு ஆயுத சப்ளையை நிறுத்தியது அமெரிக்கா!
வாஷிங்டன்: ரஷ்யாவுடன் உக்ரைன் போரில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு அனுப்பப்பட்டு வந்த ஆயுதங்களில் கணிசமான அளவை நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இதனால் போரில் உக்ரைன் தனித்துவிடப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் இராணுவ உதவி மற்றும் பிற நாடுகளுக்கான ஆதரவு குறித்து பாதுகாப்புத் துறை சமீபத்தில் ஆய்வை மேற்கொண்டிருந்தது. இந்த ஆய்வின் முடிவில், உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இகுறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் அன்னா கெல்லி கூறுகையில், "அமெரிக்காவின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கியது. இந்த போரில் உக்ரைனுக்கு, அமெரிக்கா முழு அளவில் உதவி செய்தது. பைடன் இருந்த வரை இது பிரச்சனையாக மாறவில்லை. ஆனால் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து இந்த ஆயுத சப்ளை குறித்து, அரசு நிர்வாகத்தில் சிலர் கருத்து தெரிவிக்க தொடங்கினர். இந்த சப்ளை காரணமாக அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு குறைந்து வருவதாக கூறியுள்ளனர். இதனையடுத்துதான் ஆயுத சப்ளை நிறுத்தம் குறித்து அறிவிப்பு வந்திருக்கிறது.
இந்த அறிவிப்பு குறித்து உக்ரைன் அரசாங்கம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. மறுபுறம் எந்த வகையான ஆயுத ஏற்றுமதிகள் நிறுத்தப்பட்டுள்ளன என்பது குறித்து அமெரிக்க அதிகாரிகளும் தகவல்களை வெளியிடவில்லை.
இரு நாடுகளும் இது குறித்து வாய் திறக்கவில்லை என்றாலும் கூட, எந்தெந்த ஆயுதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன என்பது குறித்து சில தகவல்கள் கசிந்திருக்கின்றன. அதாவது வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மற்றும் ஏவுகணைகள் ஆகியவை உக்ரைனுக்கு அனுப்பப்படாமல் இருக்கின்றன என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இது தவிர, பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணைகள், பீரங்கி குண்டுகள் இன்ன பிற ஏவுகணைகளையும் அமெரிக்கா நிறுத்தி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இரு தினங்களுக்கு முன்னர்தான் உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்திருந்தது. இதற்கு பதிலடி கொடுக்க இருந்த நேரத்தில், அமெரிக்கா தனது ஆயுத சப்ளையை திடீரென குறைந்திருப்பது சர்வதேச அளவில் விவாதங்களை தூண்டியுள்ளது.
உன்னைய நம்பித்தானே ஜெலன்ஸ்கி போரில் இறங்கியிருந்தார். இப்போது திடீருனு ஆயுத சப்ளையை நிப்பாடினா எப்படி? என்று அமெரிக்காவுக்கு எதிராக பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சமீபத்தில் நெதர்லாந்தில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டில் இந்த விகாரம் குறித்து டிரம்ப்-ஜெலன்ஸ்கி இடையே பேச்சுவார்த்தை நடத்திருக்கிறது. இதனையடுத்துதான் இந்த ஆயுத சப்ளை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
இதற்கான காரணம் கனிம வளங்கள் ஒப்பந்தம்தான். அதாவது இத்தணை ஆண்டுகளாக அமெரிக்க கொடுத்த உதவிக்கு கைமாறாக உக்ரைன் தனது நாட்டில் உள்ள கனிம வளங்களில் பாதியை அமெரிக்காவுக்கு தர வேண்டும் என்று டிரம்ப் கூறி வந்தார். இதற்கு ஜெலன்ஸ்கியும் ஒப்புக்கொண்ட நிலையில், இது ஒப்பந்தமாக மாறுவதில் கால தாமதம் ஏற்பட்டிருக்கிறது. எனவேதான்தான் தற்போது டிரம்ப் ஆயுத சப்ளையை நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications