உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தம்.. தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்த அதிபர் டிரம்ப்.. ஏன் முக்கியம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரில் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த எரிசக்தி போர் நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அதாவது இரு நாடுகளும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தாது. இதனால் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்வது குறையும்.

உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் பல முறை முயன்றுவிட்டன. இருப்பினும், போர் முடிவதாக இல்லை. அதிலும் சமீப காலமாக இரு நாடுகளுமே எதிரி நாடுகளின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது தாக்குதலை தீவிரப்படுத்தின. இதனால் கச்சா எண்ணெய் விலையும் உயர ஆரம்பித்துவிட்டன.

Donald Trump Russia-Ukraine Energy Ceasefire

உக்ரைன் ரஷ்யா போர்

இதற்கிடையே ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரில் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், "ரஷ்யா மற்றும் உக்ரைன் இரு தரப்பும் எரிசக்தி தளங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த ஒப்புக்கொண்டன" என்றார்.

மேலும், இந்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்த வேண்டாம் என்றும் இரு நாடுகளையும் அவர் எச்சரித்துள்ளார். ஆனால், இந்தத் தற்காலிக போர் நிறுத்தம் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும், அதை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்து அவர் விளக்கமளிக்கவில்லை. ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளும் இது தொடர்பாக விளக்கம் அளிக்கவில்லை..

ஷாக்கான ஜெலன்ஸ்கி

டிரம்பின் அறிவிப்பு குறித்து சர்வதேச ஊடகத்திடம் பேசிய ஜெலென்ஸ்கி, இது தனக்கே புதிய தகவல் என்று தெரிவித்துள்ளார். அதாவது உக்ரைன் அதிபருக்கே தெரியாமல் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இருப்பினும், தங்கள் எரிசக்தி தளங்கள் மீதான தாக்குதல்களை ரஷ்யா நிறுத்த ஒப்புக்கொண்டால்.. உக்ரைனும் அதற்கு சம்மதிக்கும் என அவர் கூறியுள்ளார். புதின் உடன் டிரம்ப் இது தொடர்பாக பேசி சம்மதிக்க வைத்திருந்தால்.. போர் நிறுத்தம் எப்போது தொடங்கும் என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும், உக்ரைன் அதற்கு தயாராக இருப்பதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

டிரம்ப் விமர்சனம்

முன்னதாக நேற்றைய தினம் தான் உக்ரைனில் புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று டிரம்ப் கூறியிருந்தார். 2019ஆம் ஆண்டுக்கு பிறகு அங்கு அதிபர் தேர்தல் நடைபெறவில்லை என சொன்ன அவர், ரஷ்யாவுடன் அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதில் ஜெலென்ஸ்கி தோல்வியடைந்துவிட்டதாக விமர்சித்தார். இதற்குப் பதிலளித்த ஜெலென்ஸ்கி, நாட்டின் தலைவரை தேர்ந்தெடுப்பது உக்ரைன் மக்களின் முடிவு என்று கூறினார். போர் நடைபெறும் சூழலில் தேர்தலை நடத்துவது மிகவும் கடினம் என்றும், வாக்குப்பதிவுக்கான உள்கட்டமைப்புகளை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

ரஷ்யா

இதற்கிடையே ரஷ்யாவிடம் இருந்து டீசலை உலக சந்தைக்கு எடுத்து வரவும் அதற்கு பதிலாக ரஷ்யா மீதான பொருளாதார தடைகளில் தளர்வு அளிப்பதற்கும் டிரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இருப்பினும், இந்த முடிவு ரஷ்யாவின் தாக்குதல்களை அதிகரிக்க வழிவகுக்கும் என ஜெலென்ஸ்கி விமர்சித்தார். அதற்கு பதிலடி கொடுத்த டிரம்ப், சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை உயர்வுக்கு உக்ரைனே காரணம் என்று குற்றஞ்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+