அதிர வைக்குது அரிசி.. பதற வைக்கும் பருப்பு விலை! அசட்டாய்ப் பேசிய தவெக அமைச்சர்! பறந்த கண்டனம்!
சென்னை: சில்லறை விலையில் ஒரு கிலோ அரிசி ரூ.27 வரையிலும், துவரம் பருப்பு கிலோவுக்கு ரூ.6, உளுத்தம்பருப்பு ரூ.11 வீதமும் உயர்ந்துள்ள நிலையில், அதனால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அரிசி விலையே உயரவில்லை என்று அமைச்சர் கூறுவது மிகவும் ஆபத்தானது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டித்துள்ளார்.
கடந்த 60 நாட்களில் 5வது முறையாக அரிசி விலை உயர்ந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. 60 முதல் 70வரை விற்பனையான அரிசி, தற்போது ஒரு கிலோவுக்கு 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கர்நாடகத்தில் நெல் விளைச்சல் குறைந்துவிட்டதால் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டு விலை ஏற்றம் கண்டுள்ளது என கூறுகின்றனர் அரிசி வியாபாரிகள். கடந்த ஒரு மாதத்தில் கிலோ 55 ரூபாய் விற்கப்பட்ட கர்நாடக பொன்னி கடந்த 15 நாட்களுக்கு முன்னர் பத்து ரூபாய் விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளது.
அரிசி விலை உயர்வு
65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு சன்ன ரகம் மேலும் 15 ரூபாய் விலை உயர்வு கண்டு தற்சமயம் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 25 கிலோ கொண்ட ஒரு சிற்பம் 350 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விலையேற்றம் கண்டுள்ளது. இட்லி அரிசியாக பயன்படுத்தப்படும் அரிசிகள் 35 ரூபாயிலிருந்து கடந்த வாரம் வரை 40 ரூபாய்க்கு விலையேற்றம் செய்யப்பட்டு, தற்பொழுது 50 ரூபாயாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
நெல் விளைச்சல்
இதற்குக் காரணம் கர்நாடகத்தில் நெல் விளைச்சல் குறைந்துவிட்டதால் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டு விலை ஏற்றம் கண்டுள்ளது. இதன் காரணமாக அரிசி லோடு வருவது வெகுவாக குறைந்து விட்டது. இத்தகைய தட்டுப்பாட்டை சமாளிக்க கர்நாடக மாநில வியாபாரிகள் தமிழகத்தில் விளைவிக்கப்படும் நாட்டுப் பொன்னி ரகத்தை ஏற்றுமதி செய்து வருகிறார்கள். இதன் காரணமாக அறுபது ரூபாய் விற்பனை செய்யப்பட்டு வந்த நாட்டுப் பொன்னி தற்சமயம் 85 ரூபாய் விலை ஏற்றம் கண்டுள்ளது என்கின்றனர் வியாபாரிகள்.
பருப்பு விலை
இந்நிலையில், அரிசி, பருப்பு விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அலட்சியம் காட்டாமல் அரசு உடனடியாக நடவடிகை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழ்நாட்டில் அரிசி விலை நாளுக்கு நாள் அதிகரித்து, அன்றாட பயன்பாட்டுக்கான அரிசியே கிலோ ரூ.77 என்ற உச்சத்தை அடைந்திருக்கிறது.
அன்புமணி ராமதாஸ்
கடந்த ஜூலை மாதம் முதல் இப்போது வரையிலான 3 மாதங்களில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.27 வரையிலும், 26 கிலோ மூட்டை ரூ.700 வரையிலும் உயர்ந்திருக்கும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல், அரிசி விலை உயரவே இல்லை என்று உணவுத்துறை அமைச்சர் கூறி வருவது கண்டிக்கத்தக்கது.
புழுங்கல் அரிசி
தமிழ்நாட்டில் கடந்த ஜூலை மாதம் ரூ.1100 ஆக இருந்த 26 கிலோ எடை கொண்ட சாதாரண ரக புழுங்கல் அரிசி மூட்டை விலை இப்போது ரூ.1800 ஆக உயர்ந்திருக்கிறது. அதாவது இந்த வகை அரிசியின் விலை கிலோ ரூ.42-லிருந்து ரூ.70 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், பொன்னி புழுங்கல் அரிசி மூட்டை விலை ரூ.1400-லிருந்து ரூ.1900 ஆகவும், ஆந்திரா மற்றும் கர்நாடகத்திலிருந்து வரும் சோனா மசூரி அரிசி மூட்டை விலை ரூ.1400-லிருந்து ரூ.2000 ஆகவும் அதிகரித்திருக்கிறது.
துவரம் பருப்பு
அதேபோல், விருதுநகர் மொத்த விற்பனை சந்தையில் துவரம் பருப்பு 100 கிலோ மூட்டை விலை ரூ.13,200 -லிருந்து ரூ.600 உயர்ந்து ரூ.13,800 ஆக அதிகரித்துள்ளது. நயம் உளுந்தம்பருப்பு 100 கிலோ மூட்டை கடந்த வாரம் ரூ.9,100 முதல் ரூ.9,200 வரை விற்கப்பட்ட நிலையில் இந்த வாரம் மூட்டைக்கு ரூ.1,100 உயர்ந்து, ரூ.10,200 முதல் ரூ.10,400 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தமிழக அரசு
சில்லறை விலையில் ஒரு கிலோ அரிசி ரூ.27 வரையிலும், துவரம் பருப்பு கிலோவுக்கு ரூ.6, உளுத்தம்பருப்பு ரூ.11 வீதமும் உயர்ந்துள்ள நிலையில், அதனால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மக்களை பாதிக்கும் அரிசி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த ஜூலை 22-ஆம் தேதியும், செப்டம்பர் 27-ஆம் தேதியும் அறிக்கை வெளியிட்டிருந்தேன். ஆனால், அரிசி விலையை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்கவில்லை.
உணவுத்துறை அமைச்சர்
மாறாக, அரிசி உள்ளிட்ட 11 அத்தியாவசியப் பொருள்களின் விலைகளை கண்காணித்து வருகிறோம்; அரிசி விலை உயரவே இல்லை; இது எதிர்க்கட்சிகளால் கட்டமைக்கப்படும் பொய்யான பிம்பம் தான் உணவுத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். அர்சி விலை கிலோவுக்கு ரூ.27 வரை உயர்ந்திருப்பதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அரிசி விலையே உயரவில்லை என்று கூறுவது மிகவும் ஆபத்தானது. இத்தகைய அலட்சியப் போக்கை கைவிட்டு, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களில் விலைகளைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்." என வலியுறுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications
