தோள்பட்டையில் பை.. பைக்குள் குழந்தை.. பெண்ணை தூக்கி உள்ளே வைத்த போலீஸ்
மணிலா: பிலிப்பைன்ஸ் விமான நிலையத்தில் குழந்தையை பைக்குள் அடைத்து வைத்து கடத்தி செல்ல முயன்ற அமெரிக்க பெண்ணை விமான நிலைய போலீசார் கைது செய்தனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த 43 வயது பெண் ஜெனிபர் டால்பூட். இவர் அமெரிக்காவின் ஒகிகோயுவுக்கு பிலிப்பைன்ஸின் மணிலா வழியாக செல்வதற்காக அங்குள்ள விமானநிலையத்திற்கு அவர் தோள்பட்டையில் பையுடன் வந்தார்.

மணிலா விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் ஜெனிபரை சோதித்தனர். அப்போது தோள்பட்டை பையில் 6 வயது குழந்தை உயிருடன் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் பிலிப்பைன்ஸில் இருந்து குழந்தையை அமெரிக்காவுக்கு கொண்டு செல்ல குழந்தையின் தாய் அனுமதிக்கவில்லை.
இதனால் அந்த 6 வயது குழந்தையை தாய்க்கு தெரியாமல் கடத்திக்கொண்டு அமெரிக்கா செல்ல முடிவு செய்துள்ளார் ஜெனிபர். இதன்படி கடத்திச் சென்ற போது தான் பிடிப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனிடையே 6வயது குழந்தையின் உண்மையான தாய் யார் என்பதை பிலிப்பைன்ஸ் போலீசார் தேடிவருகிறார்கள்.












Click it and Unblock the Notifications