போர்க்களமான இந்திய பெருங்கடல்.. ஈரான் கப்பல் மீது மர்ம நீர்மூழ்கி கப்பல் தாக்குதல்.. 101 பேர் மாயம்
கொழும்பு: இந்திய பெருங்கக்கடலில்.. இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் இன்று நிகழ்ந்த அதிர்ச்சிகரமான நீர்மூழ்கி கப்பல் தாக்குதலில், ஈரானியக் கப்பல் ஒன்று நிலைகுலைந்தது. இந்தத் தாக்குதலில் 101 பேர் மாயமாகியுள்ளனர் மற்றும் 78 பேர் படுகாயமடைந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் ஈரான் கப்பல் மீது நடத்தப்பட்ட நீர்மூழ்கித் தாக்குதல், சர்வதேச அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, இலங்கையில் அமெரிக்காவின் ராணுவத் தளம் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் பெரிய அண்ணன் USA இருக்கிறாரா என்கிற கேள்வி விஸ்வரூபம் எடுத்துள்ளது.

நடுக்கடலில் நடுக்கம்: என்ன நடந்தது?
புதன்கிழமை மதியம், இந்திய பெருங்கக்கடலில் இலங்கையின் தெற்கு கடலோரப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானியக் கப்பல் ஒன்றின் மீது திடீரென நீர்மூழ்கிக் கப்பல் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான கப்பலில் இருந்து அவசர கால அபாயச் சங்கு (Distress Call) ஒலிக்கப்பட, ஒட்டுமொத்தப் பிராந்தியமும் பதற்றத்தில் ஆழ்ந்தது.
இந்தத் தாக்குதலில் கப்பல் பலத்த சேதமடைந்து மூழ்கத் தொடங்கிய நிலையில், அதிலிருந்த ஊழியர்கள் மற்றும் பயணிகள் கடலில் தத்தளித்தனர்.
மீட்புப் பணியில் இலங்கை கடற்படை
தகவல் கிடைத்த உடனே களத்தில் குதித்த இலங்கை கடற்படை, போர் கால அடிப்படையில் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இது குறித்து இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்:
"ஈரானியக் கப்பலில் இருந்து வந்த அவசர அழைப்பைத் தொடர்ந்து, இலங்கை கடற்படை உடனடியாக மீட்புப் பணிகளைத் தொடங்கியது. இதுவரை காயமடைந்த 32 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்," எனத் தெரிவித்தார்.
இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசுகையில், "கப்பலில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு கரைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து இலங்கை அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும்," என உறுதிப்படத் தெரிவித்தார்.
மர்மம் நீடிக்கும் தாக்குதல்
இந்தத் தாக்குதலை நடத்திய நீர்மூழ்கிக் கப்பல் யாருடையது? தாக்குதலுக்கான பின்னணி என்ன? என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வத் தகவலும் வெளியாகவில்லை. கப்பலில் மொத்தம் எத்தனை பேர் இருந்தார்கள் என்ற விவரமும் மர்மமாகவே உள்ளது.
கடலில் மாயமான 101 பேரைத் தேடும் பணி ஹெலிகாப்டர்கள் மற்றும் ரோந்துக் கப்பல்கள் உதவியுடன் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் நிகழ்ந்த இந்தத் தாக்குதல், ஆசியப் பிராந்தியத்தில் பெரும் அரசியல் மற்றும் பாதுகாப்பு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் தரப்பில் இருந்தும், இலங்கை பாதுகாப்புத் துறையிடம் இருந்தும் கூடுதல் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
இலங்கையில் அமெரிக்கத் தளமா? - ஒரு பார்வை
இலங்கையின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் அமெரிக்கா தனது பிடியை இறுக்கி வருவதாக நீண்டகாலமாகவே அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். குறிப்பாக, அக்சா (ACSA) மற்றும் சோபா (SOFA) போன்ற பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மூலம் இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் வான்பரப்பைப் பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி உண்டு.
இலங்கையின் திருகோணமலை அல்லது தெற்குப் பகுதிகளில் அமெரிக்காவின் மறைமுகத் தளம் அல்லது கண்காணிப்பு மையம் இருப்பதாகக் கூறப்படும் சூழலில், ஈரானியக் கப்பல் மீதான இந்தத் தாக்குதல் அந்தச் சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்துவதாகப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்கா ஏன் தாக்க வேண்டும்?
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் காரணமாக, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பனிப்போர் தற்போது இந்தியப் பெருங்கடல் வரை நீண்டுள்ளது.
பழிவாங்கல் நடவடிக்கை: வளைகுடாப் பகுதியில் அமெரிக்கக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரானின் சரக்குக் கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிகள் குறிவைத்திருக்கலாம்.
கண்காணிப்பு பலவீனம்: இலங்கையின் கடல் எல்லைக்குள் அமெரிக்காவின் நடமாட்டம் அதிகம் இருப்பதால், அவர்களின் ராடார் பார்வையில் படாமல் ஒரு நீர்மூழ்கித் தாக்குதல் நடத்தப்படுவது கடினம். எனவே, இது அமெரிக்காவின் திட்டமிட்ட 'ஆபரேஷனாக' இருக்க வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படுகிறது.
மௌனம் காக்கும் கொழும்பு - நழுவும் வாஷிங்டன்!
இந்தத் தாக்குதல் குறித்து இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் இதுவரை எந்த நாட்டையும் நேரடியாகக் குற்றம் சாட்டவில்லை. அதேநேரம், அமெரிக்கத் தூதரகம் இது குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்காமல் மௌனம் காத்து வருகிறது.
கப்பலில் இருந்த 101 பேர் மாயமாகியுள்ள நிலையில், கடலுக்கு அடியில் ஒளிந்திருக்கும் அந்த 'மர்ம நீர்மூழ்கி' யாருடையது என்பது தெரிந்தால் மட்டுமே, தெற்காசியாவில் அடுத்த போர் மேகங்கள் சூழுமா என்பது தெரியவரும்.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications