இரக்கமே இல்லை.. இவ்வளவு கொடூரமா? இந்த ஒரு வீடியோவை பாருங்க.. இஸ்ரேலின் அதிர வைக்கும் முகம்

Subscribe to Oneindia Tamil

ஜெருசலேம்: இஸ்ரேல் காசா மீது நடத்தி வரும் தாக்குதல் தொடர்பாக அதிர வைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

இஸ்ரேல் பாலஸ்தீன போர் உச்சம் அடைந்து உள்ளது. காஸாவை மொத்தமாக அழிக்காமல் விட மாட்டேன்.. இதுவரை காஸா எதிர்கொண்டதிலேயே மிகப்பெரிய தாக்குதலை நாங்கள் கொடுக்க போகிறோம். காஸாவில் இனி ஹமாஸ் இயக்கம் எழுந்திருக்கவே முடியாத அளவிற்கு மிகப்பெரிய தாக்குதலை நடத்த இருக்கிறோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

Video: An Israeli military vehicle intentionally obstructing a Palestinian ambulance

இஸ்ரேலின் மீது காஸாவில் இருந்து கொண்டு ஹமாஸ் நடத்திய சர்ப்ரைஸ் அட்டாக்தான் இதற்கு காரணம். நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை ஏவி இஸ்ரேல், மீது காஸாவின் ஹமாஸ் இயக்கம் இந்த தாக்குதலை நடத்தியது. இதில் 300 பேர் வரை பலியாகினர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக தற்போது இஸ்ரேல் நடத்தும் பதில் தாக்குதலில் இதுவரை இஸ்ரேல் பதில் ஏவுகணை, விமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் இதுவரை கிட்டத்தட்ட 3000 பேர் வரை இரண்டு பக்கமும் பலியாகி உள்ளனர்.

எல்லை மீறும் இஸ்ரேல்: முக்கியமாக இஸ்ரேல் நேற்று இரவு செய்த கொடூரம்.. வரலாற்றில் நடந்த போர்களில் நிகழ்ந்த கொடூரங்களிலேயே மிக மோசமானதாக பார்க்கப்படுகிறது. மருத்துவமனை மீது தாக்குதல் நடத்த கூடாது.. அகதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்த கூடாது.. அகதிகள் செல்லும் பாதுகாப்பு சாலைகளில் தாக்குதல் நடத்த கூடாது.. சரண்டர் ஆகும் நபர்கள் மீது தாக்குதல் நடத்த கூடாது என்றெல்லாம் போர் விதிகள் உள்ளன.

இதில் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்த கூடாது.. என்பதை தவிர்த்து மற்ற அனைத்து போர் கட்டுப்பாடுகளையும் ஏற்கனவே இஸ்ரேல் மீறிவிட்டது. சமீபத்தில் கூட அகதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. அதேபோல் அகதிகள் செல்லும் பாதுகாப்பு சாலைகளில் தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில்தான் குரூரத்திற்கு எல்லை இல்லை என்று சொல்லும் அளவிற்கு இஸ்ரேல் மேலும் எல்லை மீறி.. மருத்துவமனை மீதே தாக்குதல் நடத்தி உள்ளது.

இந்த போரின் ஒரு பகுதியாக காஸாவில் உள்ள Al-Ahly Baptist என்ற மருத்துவமனை மீது ராக்கெட் வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. விமான ரெய்டில் அவர்கள் ராக்கெட்டை ஏவி உள்ளனர். இதில்தான் மருத்துவமனை தாக்கப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலில் மொத்தம் 600 பேர் வரை பலியாகி உள்ளனர்.

உண்மையான பலி எண்ணிக்கை 800 ஐ தாண்டும். குழந்தைகள், பெண்கள் என்று மருத்துவமனையில் இருந்த எல்லோரும் கொலை செய்யப்பட்டு உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்னொரு பக்கம் உள்ளே ஹமாஸ் படைகள் இருந்திருக்கலாம் என்ற நினைப்பில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

வீடியோ; இந்த நிலையில்தான் இஸ்ரேல் ராணுவ படை பாலஸ்தீனம் ஆம்புலன்ஸை மறைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு இஸ்ரேலிய இராணுவ வாகனம் வேண்டுமென்றே பாலஸ்தீனிய ஆம்புலன்ஸைத் தடுக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

இஸ்ரேலோ.. பாலஸ்தீனமோ.. நீங்கள் எந்தப் பக்கம் இருந்தாலும், இதை ஏற்க முடியாது என்பதை நாம் உணர வேண்டும். பெத்லகேமில் உள்ள டிஷே முகாமுக்கு அருகில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. ஆம்புலன்ஸ் செல்ல விடாமல் வேண்டும் என்றே இஸ்ரேல் ராணுவ வாகனம் மறைப்பது கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. இஸ்ரேலின் இந்த கொடூர குணம் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+