நிலநடுக்கம்... தீவிரவாதிகள் நுழைவதைத் தடுக்க இந்தியா- நேபாள எல்லையில் பலத்த பாதுகாப்பு!
லக்னோ: நிலநடுக்கம் தொடர்ந்து ஏற்பட்டு வரும் நிலையில் இதனை பயன்படுத்தி தீவிரவாதிகள் நுழைந்துவிடாத வகையில் இந்தியா- நேபாள எல்லையில் பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
நேபாளம் மற்றும் இந்தியாவின் வட மாநிலங்களில் கடந்த சனிக்கிழமையன்று நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த பகுதிகளில் இருநாட்டு பாதுகாப்பு படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

தீவிரவாதிகள் ஊடுருவல்?
இந்த இயற்கை பேரழிவை பயன்படுத்தி மாவோயிஸ்டுகள் மற்றும் தேச விரோத செயல்களில் ஈடுபடுவோர், நேபாள எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ வாய்ப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. எனவே இந்தியா-நேபாள எல்லைப்பகுதியில் இந்திய பாதுகாப்பு படையினர் மிகுந்த உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

உஷார் நிலை
உத்தரபிரதேசத்தில் 550 கி.மீ. தூரத்துக்கு இந்தியா-நேபாள சர்வதேச எல்லைப்பகுதி வருகிறது. இந்த பகுதியில் பாதுகாப்பு பணிகளை கவனித்து வரும் மத்திய துணை ராணுவம் மற்றும் உத்தரபிரதேச போலீசார் மிகுந்த விழிப்புடன் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

படை குவிப்பு
இந்த எல்லைப்பகுதியில் கூடுதல் படையினரை குவித்துள்ளதுடன், பாதுகாப்பு தொடர்பான உளவுத்துறை தகவல்களை இருநாட்டு அதிகாரிகளும் பகிர்ந்து வருகின்றனர்.

உ.பி. மாநில போலீசார்
உத்தரபிரதேசத்தின் சிறப்பு அதிரடிப்படை மற்றும் தீவிரவாத எதிர்ப்பு படையினரும் பாதுகாப்பு பணிகளில் சிறப்பு கவனம் செலுத்தி வருவதாக உத்தரபிரதேச போலீஸ் டி.ஜி.பி. ஏ.கே.ஜெயின் கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications