பற்றி எரியும் அயர்லாந்து.. பள்ளி குழந்தைகளுக்கு கத்தி குத்து! டென்ஷனான மக்களால் வெடித்தது வன்முறை
டப்ளின்: அயர்லாந்து நாட்டில் பள்ளி குழந்தைகள் மீது நடத்தப்பட்ட கத்தி குத்து தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிராக மக்கள் கலவரத்தில் குதித்திருக்கின்றனர்.
அயர்லாந்து தலைநகர் டப்ளினில் பர்னல் சதுக்கம் அருகே இயங்கி வரும் தொடக்க பள்ளிக்கு வெளியில் மர்மநபர் ஒருவர் நேற்று கையில் கத்தியுடன் சுற்றி வந்திருக்கிறார். அப்போது பள்ளி முடித்து மாணவர்கள் வெளியில் வந்திருக்கிறார். இந்த நேரத்தில் யாரும் எதிர்பாராதவிதமாக அவர் மாணவர்கள் மீது கத்தியால் சரமாரியாக தாக்கியிருக்கிறார். இதில் மாணவர்கள் அலறி ஓட, அக்கம் பக்கம் இருந்தவர்கள் மர்மநபரை பிடித்து சரமாரியாக தாக்கி போலீஸ் வசம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த கொடூர தாக்குதலில் 5 வயது சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் இரண்டு சிறுவர்கள் மற்றும் ஒரு பெண்மணிக்கு லேசான காயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்தையடுத்து பொதுமக்கள் சிலர் ஆவேசமடைந்து போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். காவல்துறை வாகனங்கள், பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன. கார்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டிருக்கின்றன. இதில் போலீசார் சிலர் காயமடைந்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் தவறான தகவல்கள் பரவியதே இந்த வன்முறைக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இதனையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அந்நாட்டு அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்கள் நிச்சயம் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்று அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
அதேபோல இந்த கலவரத்திற்கு அந்நாட்டின் தீவிர வலதுசாரி அமைப்புகள்தான் காரணம் என்றும் காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது. போராட்டக்காரர்கள், அயர்லாந்தில் புலம்பெயர்ந்து வந்தவர்களுக்கு எதிராக தீவிரமான வன்முறையை கையில் எடுத்திருக்கின்றனர். கலவரத்தை கட்டுப்படுத்தவும், இனி இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்கவும் 400 போலீஸ் அதிகாரிகள் மத்திய டப்ளின் பகுதியில் குவிக்கப்பட்டிருப்பதாகவும், கலவரத்தில் தொடர்புடைய 34 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்தையடுத்து அயர்லாந்தின் நாடாளுமன்ற கட்டிடங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அந்நாட்டின் அதிபர் மற்றும் பிரதமர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தங்களது ஆதரவையும் தெரிவித்துள்ளனர். பள்ளி குழந்தைகளுக்கு கத்தி குத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications