டிரம்ப் சொன்னது என்ன? மோடிக்கு போன் போட்டு ரகசியம் கூறிய ரஷ்ய அதிபர் புதின்! வெளியான தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை டொனால்ட் டிரம்ப் விதித்துள்ளார். இதற்கிடையே தான் கடந்த 15ம் தேதி அமெரிக்காவின் அலஸ்காவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் - டொனால்ட் டிரம்ப் சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பு நம் நாட்டுக்கு மிகவும் முக்கியமானதாகும். பேச்சுவார்த்தை அமைதியாக முடிவடைந்த நிலையில் இன்று திடீரென்று புதின், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நிலையில் அதன் பின்னணி பற்றிய விவரம் வெளியாகி உள்ளது.

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை டிரம்ப் விதித்துள்ளார். இதில் 25 சதவீத வரி கடந்த 7 ம் தேதி அமலுக்கு வந்துவிட்டது. அடுத்தக்கட்டமாக வரும் 27 ம் தேதி 25 சதவீத வரி அமலுக்கு வர உள்ளது. மேலும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கினால் தொடர்ந்து வரி, பொருளாதார தடைகளை விதிப்பதாக டிரம்ப் மிரட்டினார்.

vladmir-putin-dials-pm-modi-and-sharing-insights-on-alaska-talks-with-donald-trump

இதற்கிடையே தான் கடந்த 15ம் தேதி அமெரிக்காவின் அலஸ்காவில் டொனால்ட் டிரம்ப் - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் சந்தித்து பேசினர். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்த போரை நிறுத்த டிரம்ப் முயன்று வரும் நிலையில் அதன் ஒருபகுதியாக இந்த பேச்சுவார்த்தை நடந்தது.

டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் தான் புதின், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இன்று பேசினார். இந்த வேளையில் டொனால்ட் டிரம்ப் உடன் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் பற்றி புதின், மோடியிடம் பகிர்ந்துள்ளார்.

இதுபற்றி பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛எனது நண்பரும், ரஷ்ய அதிபருமான புதின் தொலைபேசியில் அழைத்தார். அலாஸ்காவில் டிரம்ப் உடனான சமீபத்திய சந்திப்பு குறித்த விவரங்களை பகிர்ந்து கொண்டார். இதற்கு நன்றி. உக்ரைன் மோதலுக்கு அமைதியான முறையில் தீர்வு காண இந்தியா தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது. மேலும் இதுதொடர்பான அனைத்து முயற்சிகளையும் ஆதரிக்கிறது. வரும் காலத்திலும் இதற்கான பணிகளை எதிர்நோக்குகிறேன்'' என்று கூறியுள்ளார்.

இந்த தொலைபேசி உரையாடல் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் புதின் - டிரம்ப் சந்திப்பின்போது உக்ரைன் போர் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது புதினுக்கு ஆதரவாக டிரம்ப் இருப்பதாக கூறப்படுகிறது. உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அந்த நாட்டின் இடங்களை விட்டு கொடுக்கமாட்டேன் என்று அடம் பிடிக்கும் நிலையில் புதின் தனக்கு தேவையான இடத்தை வழங்கினால் போரை நிறுத்துவதாக கூறியுள்ளார். இதற்கு டிரம்பும் பாசிட்டிவ்வான பதில் சொல்லி உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ரஷ்யா மீதான பொருளாதார தடையால் இந்தியாவுக்கு வரி விதிக்கப்பட்டு இருப்பது பற்றியும், அமெரிக்கா - ரஷ்யா இடையேயான பொருளாதார உறவுகள் பற்றியும் இருவரும் விவாதித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் புதினை சந்தித்த பிறகு டிரம்பும் இந்தியாவுக்கான வரி விதிப்பு நடவடிக்கையில் சாப்ட் டோனை கடைப்பிடிக்க தொடங்கினார். ரஷ்யா உறவால் இந்தியாவுக்கான 2 ம் நிலை பெருளாதார தடைகள் விதிப்பது பற்றி இப்போதைக்கு யோசிக்கவில்லை என்று அவர் கூறியிருந்தார். இதனால் இந்த விவகாரத்தில் புதின் - டிரம்ப் இடையே என்ன பேசப்பட்டது என்பது பற்றிய விவரங்களை தான் மோடியிடம் அவர் பகிர்ந்து இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+