ஹமாஸ் குழுவால் அமெரிக்கர்கள் பிணைக்கைதிகளாக உள்ளனரா? ஆண்டனி பிளிங்கன் பரபர பதில்

Subscribe to Oneindia Tamil

ஜெருசலேம்: இஸ்ரேலில் அமெரிக்கர்கள் பலர் கொல்லப்பட்டு இருப்பதாகவும் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு இருப்பதாகவும் வெளியாகும் தகவலின் உண்மைத்தன்மையை சரிபார்த்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளின்கன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நீடித்து வந்தது. ஒரு காலத்தில் இஸ்ரேலின் வசம் இருந்த பாலஸ்தீனத்தின் காசா பகுதி தற்போது பாலஸ்தீனத்தில் உள்ளது. இந்த காசா பகுதியை ஹமாஸ் அமைப்பினர் நிர்வகித்து வருகின்றனர். இதனால் காசா பகுதிக்குள் இஸ்ரேலால் நுழைய முடியாத சூழல் உள்ளது. இத்தகைய நிலையில் தான் காசாவை கைப்பற்ற இஸ்ரேல் முயற்சித்து வருகிறது. ஆனால் இதற்கு ஹமாஸ் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

we are verifying report Says antony blinken after reports says US citizen being hostage by hamas

இதன் காரணமாக ஹமாஸ் அமைப்பை தீவிரவாத அமைப்பாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதனாலேயே பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும், இஸ்ரேலுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. அதன்படி தான் நேற்று காலையில் இந்த மோதல் போராக உருவாகி உள்ளது. ஏற்கனவே கடந்த 2021-ல் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே பெரிய அளவிலான மோதல் வெடித்தது. ஆனால் பல்வேறு நாடுகள் தலையீட்டின் பேரில் இந்த மோதல் போர் அளவிற்கு செல்லாமல் ஓரளவு முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில், நேற்று பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது வெறும் 20 நிமிடங்களில் 5,000 ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தினர். யாருமே எதிர்பார்க்காத வகையில் நேற்று அந்நாட்டு நேரப்படி காலை 6.30 மணிக்கு இஸ்ரேல் நாட்டை நோக்கி பாலஸ்தீன் ஹமாஸ் மிக மோசமான தாக்குதலை முன்னெடுத்தது. ஏவுகணைகள் மழைபோல இஸ்ரேலை நோக்கி பாய்ந்தன. இதற்கு பதிலடி தாக்குதலை இஸ்ரேலும் தொடங்கி உள்ளது.

இஸ்ரேலில் இருந்து ராணுவ போர் விமானங்களின் காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் உள்ள இடங்களில் தாக்குதலை தொடர்ந்துள்ளனர். இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காசா பகுதியில் பாலஸ்தீனியர்கள் நுற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல், ஹமாஸ் குழுவினர் நடத்திய தாக்குதல்களில் இஸ்ரேலிலில் 600க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வன்முறையாக இது பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இஸ்ரேலில் பதற்றமான சூழல் காணப்படுகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், இஸ்ரேலில் 600 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, காசா எல்லையெருகே உள்ள தெற்கு இஸ்ரேல் பகுதியில் ரேவ் பார்ட்டியில் பங்கேற்க சென்ற வெளிநாட்டவர்கள் பலரை ஹமாஸ் படையினர் கொன்றதாக தகவல்கள் பரவி வருகிறது.

இந்த நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், " உயிரிழந்தவர்களில் அமெரிக்கர்களும் இருப்பதாக தகவல் உள்ளது. இந்த தகவலின் உண்மைத்தன்மையை சரிபார்ப்பதில் தீவிரமாக உள்ளோம். அதேபோல பிணைக்கைதிகளாக சிலர் பிடிபட்டுள்ளதகவும் தகவல்கள் வருகிறது.

அது குறித்த உண்மைதன்மையையும் அடையாளம் காணும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.அமெரிக்கர்கள் யாராவது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கே அதிக முன்னுரிமை அளிக்கப்படும்" என்றார். இதனிடையே, இஸ்ரேலுக்கு கூடுதல் வெடி மருந்துகள் ஆயுதங்கள் உள்ளிட்டவற்றையும் அனுப்ப உள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+