வெடிமருந்துகளுடன் பாய்ந்து வந்த லாரி.. உயிரைக் காக்க ஓடிய மக்கள்.. தெருவெல்லாம் ரத்தம்!
பாரிஸ்: வெடி மரு்நதுகளுடன் கூட்டத்தை நோக்கி லாரி பாய்ந்து வந்ததாகவும், அதில் சிக்கி பலர் சிதைந்து போனதாகவும், உயிரைக் காக்க மக்கள் அங்குமிங்கும் சிதறி ஓடியதாகவும் நைஸ் தாக்குதல் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
நைஸ் தாக்குதல் சம்பவம் உலகையே அதிர வைத்துள்ளது. இங்கு நடந்தது போல எங்கும் நடக்கலாம் என்பதால் அத்தனை நாடுகளும் நைஸ் சம்வத்தால் அதிர்ந்துள்ளன.
உள்ளூரில் நடந்த பாஸ்டில் தினக் கொண்டாட்டத்திற்காக மக்கள் கூடியிருந்த நிலையில் துனிஷீயாவை பூர்வீகமாகக் கொண்ட நபர் ஒருவர் வெடிபொருட்கள் நிரப்பிய லாரியுடன் கூட்டத்திற்குள் அதி வேகமாக ஓட்டிச் சென்று தாக்குதல் நடத்தினார்.
இந்த சம்பவம் குறித்து நேரில் பார்த்தவர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள்:

சிதறி ஓடிய மக்கள்
டொமினிக் மொலினா மற்றும் அவரது கணவர் டோனி ஆகியோர் அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் தங்களது 14 வயது மகனுடன் தங்கியிருந்தனர். ஹோட்டல் பால்கனியிலிருந்து இந்த தாக்குதலை அவர்கள் நேரில் பார்த்தனர். மக்கள் உயிரைக் காக்க சிதறி ஓடியதாக இவர்கள் கூறுகின்றனர்.

கண்ணிமைக்கும் நேரத்தில்
மொலினா கூறுகையில் கண்ணிமைக்கும் நேரத்தில் அது நடந்து விட்டது. என்ன நடந்தது என்று ஊகிக்கக் கூட முடியவில்லை. தெரு முழுவதும் சிறிதுநேரத்தில் ரத்த வெள்ளமாக மாறிப் போனது.

அதிர்ச்சி அடைந்தோம்
எனது மகன் அதைப் பார்த்து அதிர்ந்து விட்டான். ஆடிப் போய் விட்டான். நாங்களும்தான். வாழ்க்கையில் இப்படி ஒரு தாக்குதலை நான் பார்த்ததே இல்லை.
பலத்த சத்தம்
முதலில் லாரி மோதியபோது பெரும் சத்தம் கேட்டது. தொடர்ந்து துப்பாக்கிகளால் சுடும் சத்தம் கேட்டது. அதையடுத்து நாங்கள் ஓடி வந்து பார்த்தோம்.மக்கள் சிதறி ஓடியதைக் காண முடிந்தது. புகை மண்டலமாக இருந்தது.
|
விழுந்த உடல்கள் மீது
இறந்து கிடந்த உடல்கள் மீதும் மக்கள் ஓடியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். ஆனால் உயிரைக் காக்க மக்களுக்கு வேறு வழி தெரியவில்லை. கிடைத்த இடத்தில் புகுந்து ஓடினார்கள்.
|
தெருவெல்லாம் உடல்கள்
அந்த இடம் முழுவதும் உடல்களாக கிடந்தன. ரத்தத் கறையாக அந்தத் தெருவே மாறிப் போயிருந்தது. போர்க்களம் போல அது காணப்பட்டது என்றார் அவர்.
|
தீவிரவாதி சுட்டுக் கொலை
இந்தத் தாக்குதலை நடத்திய நபரை பிரெஞ்சு போலீஸார் சுட்டுக் கொன்று விட்டனர். அவரது உடலைக் கைப்பற்றி மேல் விசாரணை நடந்து வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications