"சண்ட செய்வோம்.." ரஷ்யாவிடம் சரணடைய மாட்டோம் - சூளுரைத்த உக்ரைன் அதிபர்!
கிவி: உக்ரைன் ரஷ்யா போர் உச்சகட்டத்தை எட்டிவரும் நிலையில், ஒருபோதும் ரஷ்யாவிடம் சரணடைய மாட்டோம் என உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
உக்ரைன் ரஷ்யாவில் கடந்த இரண்டு மாதங்களாக போர் சூழல் நிலவி வந்தது. பேச்சுவார்த்தைகள் ஏற்படாமலேயே இன்று காலை உக்ரைன் மீது போர் தொடுத்தது ரஷ்யா.
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை ரஷ்யா நடத்தி வருகிறது.

தாக்குதல்
ரஷியாவின் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகிறது. கிழக்குப் பகுதி மற்றும் தலைநகர் கிவி மீது தொடர் தாக்குதல் நடத்துகிறது ரஷ்யா. இந்நிலையில், உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள பதிலடி கொடுத்து வருகிறது. ரஷியாவின் ஐந்து போர் விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பதிலுக்கு ரஷ்யாவும் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

விளாதிமர் புதின்
தாக்குதல் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், உக்ரைன் வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு வீடுகளுக்கு செல்லும்படி ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனினும் உக்ரைன் படைகள் பின்வாங்காமல் பதிலடி கொடுத்தவண்ணம் உள்ளன. உக்ரைனின் கிரிமியாவைக் கைப்பற்றி ரஷ்யாவுடன் இணைக்க புதின் நினைக்கிறார். ஆனால் உக்ரைன் அதற்கு சரிசமமாக பதிலடி கொடுத்து வருகிறது.

உக்ரைன் அதிபர்
உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, நடந்து வரும் போர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ''ரஷ்ய அதிபர் எங்கள் வீரர்களை திரும்பிப்போக சொல்கிறார். ஆனால், ஒருபோதும் ரஷியாவிடம் சரண் அடைய மாட்டோம்'' என திட்டவட்டமாக கூறி உள்ளார். மேலும் ரஷியா உடனான அனைத்து உறவுகளையும் முறித்துக்கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.

பிரிவினைவாதிகள்
ரஷ்யாவுக்கு ஆதரவாக கிழக்கு உக்ரைனில் சில கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள். 2014க்குப் பிறகு ரஷ்ய ஆதரவு அதிபர் மாற்றப்பட்டதும், இந்த கிளர்ச்சியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரஷ்யா உக்ரைன் போர் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் உக்ரைனில் உள்ள ரஷிய ஆதரவு பிரிவினைவாதிகள் நகரங்களை கைப்பற்றும் நடவடிக்கைகளை தொடங்கினார்கள். லுஹான்ஸ்கில் 2 நகரங்களை ரஷியா ஆதரவு பிரிவினைவாதிகள் கைப்பற்றி உள்ளனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications